TNPSC Group 2 Answer Key 2025: குரூப்-2, 2ஏ தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முறையீடு செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்.28 அன்று நடத்திய குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை, சுமார் 4.18 லட்சம் தேர்வர்கள் எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்.28 அன்று நடத்திய குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை, சுமார் 4.18 லட்சம் தேர்வர்கள் எழுதினர்.

author-image
WebDesk
New Update
tnpsc exam

TNPSC Group 2 Answer Key 2025: குரூப்-2, 2ஏ தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முறையீடு செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடத்திய குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகளை (Tentative Answer Keys) வெளியிட்டுள்ளது.

Advertisment

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப் பணியிடங்களும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி அறிவித்தது.

தேர்வு மற்றும் பணியிடங்களின் விவரங்கள்:

விவரம்எண்ணிக்கை / நாள்
மொத்த காலிப்பணியிடங்கள்    645
குரூப்-2 (நேர்காணல் பதவிகள்)    50 இடங்கள்
குரூப்-2ஏ (நேர்காணல் அல்லாத பதவிகள்)    595 இடங்கள்
விண்ணப்பித்தவர்கள்    சுமார் 5.53 லட்சம் தேர்வர்கள்
தேர்வு எழுதியவர்கள்    4.18 லட்சம் தேர்வர்கள்
தேர்வு நடந்த நாள்    செப்டம்பர் 28, 2025

இந்த பணியிடங்களுக்கு 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த செப்.28 ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வை 4.18 லட்சம் தேர்வர்கள் எழுதினர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தகுதி அடைவார்கள். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், உத்தேச விடைகளை வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisements

உத்தேச விடைகள் மற்றும் ஆட்சேபனைக்கான வழிகாட்டுதல்கள்:

தேர்வர்கள் தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த உத்தேச விடைகளைப் பார்க்கலாம். உத்தேச விடைகள் வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள், அதாவது அக்டோபர் 14 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணிக்குள் தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய வேண்டும். முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தில் உள்ள "Answer Key Challenge" என்ற சாளரத்தை (Window)ப் பயன்படுத்தி மட்டுமே ஆன்லைனில் தங்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: