தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படி, அவரது மேற்பார்வையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இலவச ஆன்லைன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளை நடத்துகிறது. அரசு பணிகளுக்கு நடைபெறும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
தலைமைச் செயலாளரும், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநருமான வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். ஆலோசனையின்படியும், அவரது மேற்பார்வையிலும் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. மேலும், கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் சென்றடையும் வகையில், இக்கல்லூரி AIM TN என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியானது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 25-2-2023 அன்று நடத்தவுள்ள குரூப்-2 முதன்மைத் தேர்விற்கான போட்டித் தேர்விற்கும் பயிற்சிக் காணொலிகளைத் தயாரித்துள்ளது. போட்டித் தேர்வுகளில் நிறைந்த அனுபவம் பெற்ற பயிற்றுநர்கள் பாடங்களை நடத்தியுள்ளார்கள். தமிழ்வழிக் கல்வி பயின்றோரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பாடங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து போதிக்கப்படுகின்றன.
60 நாட்களில் பயிற்சியை முடிக்க முடிவுசெய்துள்ளதாலும், கிராமங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளும் இந்தப் பயிற்சியை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த முயற்சிக்கு 'நோக்கம் 60 - சேர இயலாதவர்களைச் சென்றடைதல்' (MISSION 60 - Reaching the Unreached) என்று பெயரிடப்பட்டுள்ளது. முதல் காணொலி AIM TN யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காணொலிகளின் வழியாக 18 தொடர் தேர்வுகளை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றிற்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு விருப்பப்படும் மாணவர்களுக்கு அனுப்பப்படும். மாணவர்கள் எழுதி அனுப்பும் விடைத்தாள்களும் வல்லுநர்களால் திருத்தப்பட்டு மாணவர்கள் தங்கள் விடைகளைச் சுய மதிப்பீடு செய்துகொள்ளும் வகையில் திருப்பி அனுப்பப்படும் என்று அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.