/indian-express-tamil/media/media_files/2025/07/14/tnpsc-exam-2025-07-14-16-44-00.jpg)
TNPSC Group 2 Exam Group 2 and 2A TNPSC Group 2 Hall Ticket Group 2 exam date TNPSC notification 2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குரூப்-2 மற்றும் குரூப்-2A பதவிகளுக்கான தேர்வு (OMR Examination) நாளை (செப்டம்பர் 28, 2025) முற்பகல் நடைபெறுகிறது. இத்தேர்வினைத் தமிழகம் முழுவதும் 5,53,634 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொண்டுள்ளன. தேர்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடுகள்:
தேர்வர்கள் எளிதில் தேர்வு மையத்தை அடைய ஏதுவாக, போக்குவரத்துத் துறையின் மூலம் சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நாளில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியத் துறைக்கும், தேர்வர்களின் உடல்நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத் துறைக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய எச்சரிக்கை:
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலை 9.00 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். 9.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச்சீட்டை (Hall Ticket) கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டில் உள்ள அறிவுரைகள், தேர்வாணைய இணையதள அறிவுரைகள், மற்றும் வினா-விடைத் தாளில் உள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும். மின்னணுச் சாதனங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.