Advertisment

இந்தத் தவறுகளை செய்தால் மைனஸ் மார்க்: TNPSC Group 2 தேர்வர்கள் உஷார்!

குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண்கள் உண்டு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; எந்தெந்த காரணங்களுக்காக எனத் தெரிந்துக் கொள்ளுங்கள்

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

TNPSC group 2 exam minus mark to these mistakes details here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண்கள் உண்டு என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. ஆனால், தேர்வர்கள் கீழ்கண்ட தவறுகளைச் செய்தால் அவர்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் அவர்களுக்கான விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதி இருந்தால் தேர்வரின் மொத்த மதிப்பெண்ணில் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை ‘ஷேடிங்’ செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும். 

விரல் ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற தேர்வர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும்.

இதையும் படியுங்கள்: 180 கொஸ்டின் டார்கெட் பண்ணுங்க… TNPSC குரூப் 4 சீக்ரெட்ஸ்

எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது குரூப் 2 தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் மேற்கண்ட தகவல்களை கவனமாக படித்து, தேர்வில் இந்த தவறுகளை செய்யாமல், நீங்கள் விடையளித்த வினாக்களுக்கு முழுமையான மதிப்பெண்களை பெறுங்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment