விரைவில் வெளியாகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அறிவிப்பு - தேர்வர்களே தயாராவீர்...

TNPSC Group 2 exam : குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கால் அணா சம்பளம்னாலும் கவர்ன்மென்ட் சம்பளம் வாங்கணும் என்பதில் உறுதியாக உள்ளவர்களுக்கு மீண்டும் வருகிறது அரசு பணிக்கான அரிய வாய்ப்பு….ஆம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவடைந்து தேர்வர்கள் தேர்வு முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலையில், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்….

கடந்த ஆண்டில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு, முதனிலைத்தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் என்பதனடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகளில் அமர்த்தப்பட்டனர். இந்தாண்டு நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இண்டஸ்டிரியல் கோ ஆபரேடிவ் ஆபிசர், புரோபேசன் ஆபிசர், அசிஸ்டெஸ்ட் செக்சன் ஆபிசர் என 1199 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்தாண்டு குரூப் 2 தேர்வு நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டில் 1199 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கு வரையறுக்கப்பட்டிருந்த வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கு காண்போம்….

கல்வித்தகுதி

இண்டஸ்டிரியல் கோ ஆபரேடிவ் ஆபிசர்

பி.காம்., பி,ஏ, பி,எஸ்சி பட்டதாரிகள்

புரோபேசன் ஆபிசர்

பி.ஏ, பி.எஸ்சி, பி,காம் பட்டப்படிப்பு, அண்ணாமலை பல்கலைகழத்தின் B.O.L. மதுரை காமராஜர் பல்கலைழகத்தின் பி,பி,ஏ. சென்னை பல்கலைகழகத்தின் பி.லிட் பாரதியார் பல்கலைகழத்தின் பிபிஎம் அல்லது பி.லிட் பட்டப்படிப்பு

தொழிலாளர் நலத்துறையில் அசிஸ்டெண்ட் இன்ஸ்பெக்டர்

பி,ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ, அண்ணாமலை பல்கலைகழத்தின் B.O.L. மதுரை காமராஜர் பல்கலைழகத்தின் பி,பி,ஏ. சென்னை பல்கலைகழகத்தின் பி.லிட் பாரதியார் பல்கலைகழத்தின் பிபிஎம் அல்லது பி.லிட் பட்டப்படிப்பு

சப் ரிஜிஸ்டிரார் ( கிரேடு 2) – பட்டப்படிப்பு

ஸ்பெஷல் அசிஸ்டெண்ட் : தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் சீனியர் கிரேடு டைப்ரைட்டிங்கில் தேர்ச்சி

முனிசிபல் கமிஷனர் : பட்டப்படிப்பு

அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் : இளங்கலை சட்ட பட்டப்படிப்பு

தலைமைச்செயல நிதித்துறையில் அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் : எம்.காம், எம்.ஏ.(எகனாமிக்ஸ்), எம்.ஏ. (ஸ்டாஸ்டிஸ்டிக்ஸ்) அல்லது ICWAI கல்வித்திட்டத்தில் பி.காம், பி.ஏ எகனாமிக்ஸ் அல்லது ஸ்டாஸ்டிஸ்டிக்ஸ் பட்டப்படிப்பு

வயதுவரம்பு

சப் ரிஜிஸ்டிரார் (கிரேடு 2) – 20 முதல் 30 வயதிற்குள்

சிறைத்துறை புரோபேசன் ஆபிசர் – 22 முதல் 30 வயதிற்குள்

சமூக பாதுகாப்பு துறையில் புரோபேசன் ஆபிசர் – 26 முதல் 40 வயதிற்குள்

மற்ற பணியிடங்களுக்கு – 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் www.tnpsc.gov.in or www.tnpscexams.net தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்.
முதல்முறை இந்த தேர்வில் பங்கேற்க உள்ள விண்ணப்பதாரர்கள் ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனை நிறைவு செய்ய வேண்டும். பின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் செய்வதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது கல்விச்சான்றிதழ்கள், போட்டோ, கையெழுத்து உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்து தயார்நிலையில் வைத்திருப்பது நல்லது.

தேர்வு கட்டணம்

ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் – ரூ.150
முதனிலை தேர்வு – ரூ.100
முதன்மை தேர்வு – ரூ.150

அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்….

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close