"நாட்டை யாராவது துண்டாக்க நினைத்தால்” - நேபாளத்தில் இருந்து எச்சரிக்கை விடும் சீன அதிபர்!

ஹாங்காங் போராட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிரான சீன அரசின் நிலைப்பாடு உலக அரங்கில் அந்நாட்டிற்கு இறங்குமுகத்தை உருவாக்கியுள்ளது.

China president Xi Jinping warns attempts to divide the country : சீனாவிற்கும் நேபாளுக்குமான நட்புறவு 22 ஆண்டுகள் கழித்து மலரத் துவங்கியுள்ளது. 22 ஆண்டுகள் கழித்து சீன அதிபர் ஒருவர் நேபாளம் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்தியவுக்கும் சீனாவுக்கும் இடையேயான முறைசாரா மாநாட்டில் பங்கேற்றுவிட்டு 12ம் தேதி மதியம் சென்னையில் இருந்து கிளம்பிய சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரடியாக நேபாளம் சென்றார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஹிமாலயத்திற்கும் திபெத்திற்கும் நடுவே ரயில் பாதை அமைக்கும் பணி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

எச்சரிக்கை விடுக்கும் சீன அதிபர்

ஞாயிற்று கிழமை (13/10/2019) சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் போது “யாரேனும் சீனாவை துண்டாக்க நினைத்தால் அவர்கள் அப்படியே ஒடுக்கப்படுவார்கள்” என்றும் ஹாங்காங் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களால் அரசியல் அழுத்தம் பெய்ஜிங் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சீனாவின் எந்த பகுதியில் இருந்தும் நாட்டை துண்டாக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அவர்களின் எலும்புகள் உடையடும்படி நொறுக்கப்படுவார்கள் என்று கூறீயுள்ளார். ஹாங்காங்கில் சீனாவின் ஆட்சி அதிகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அங்கு வாழும் மக்களின் போராட்டத்தினை ஒடுக்குவதற்காக ரப்பர் புல்லட்டுகள், கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது சீன காவல்துறை.

ஹாங்காங்கில் விபரீதமாக ஏதேனும் நடைபெற்றால் சீனாவிடம் பேச்சுவார்த்தைக்கே செல்ல முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தகப்போரினால் உருவான பதட்டமான சூழலை சரி செய்யும் முயற்சியில் இரு நாட்டு தலைவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதி வரி இன்னும் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் இருக்கும் இஸ்லாமியர்களை ஒடுக்கும் முயற்சியில் சீன அரசு ஈடுபட்டு வருகிறது. ஷின்ஜியாங்க் பகுதியின் மேற்கு பகுதியில் 10 லட்சம் இஸ்லாமியர்களுக்காக முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்போக்கை சீனா தொடர்ந்து கடைபிடித்து வருவதை சுற்றிக் காட்டி வாசிங்டனில் செயல்பட்டு வரும் 28 சீன நிறுவனங்களை ப்ளாக்லிஸ்டாக அறிவித்திருக்கிறது அமெரிக்க அரசு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil International News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close