டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை மே 21 ஆம் தேதி நடத்தியது. அப்போது முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் முதன்மைத் தேர்வுக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தேர்வாணையம் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் மத்திய அரசு வேலை; 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு!
இந்தநிலையில், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு கடந்த 24 ஆம் தேதி ஒத்திவைக்கபட்டுள்ளது.
இந்தநிலையில், செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று தகவல் அறிந்தவர்களால் கூறப்படுகிறது. இதனால் செப்டம்பர் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil