கால் அணா சம்பளம்னாலும் கவர்ன்மென்ட் சம்பளம் வாங்கணும் என்பதில் உறுதியாக உள்ளவர்களுக்கு மீண்டும் வருகிறது அரசு பணிக்கான அரிய வாய்ப்பு….ஆம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்….
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் என இரு பிரிவாக நடத்தப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு சரியான மற்றும் தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகள், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நிலைத்தேர்வு, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் அமைப்பிலும், முதன்மை தேர்வு, மொழிபெயர்ப்பு, சுருக்கி வரைதல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான சிலபஸ் எனும் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாய் இனி காண்போம்...
முதல்நிலை தேர்வு ( Preliminary exam) : இந்த தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்பட உள்ளது
பொது அறிவு (General Studies)
Unit - 1 : பொது அறிவியல்
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல், - பொருள் உணராமல்,கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும் - கடந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்
பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள், இயக்கவியல், மின்னியல், காந்தவியல், அணுக்கரு இயற்பியல், மின்னணுவியல், தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்
தனிமங்களும் சேர்மங்களும் , அமிலங்கள், காரங்கள்ல உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்
உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் அலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள்
சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்
Unit 2 - நடப்பு நிகழ்வுகள்
வரலாறு, ஆட்சியியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்
Unit 3 - இந்தியாவின் புவியியல்
அமைவிடம், போக்குவரத்து - தகவல் தொடர்பு, சமூகப்புவியில், இயற்கைப்பேரிடர்
Unit 4 - இந்தியாவின் வரலாறும், பண்பாடும்
சிந்துவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள், விஜயநகரல மற்றும் பாமினி அரசுகளின் காலம், தென் இந்திய வரலாறு
இந்திய சமூக பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும், தொடர்ச்சியும்
இந்திய பண்பாடு
சமூக நல்லிணக்கம்
Unit -5 இந்திய ஆட்சியியல்
Unit -6 - இந்திய பொருளாதாரம்
Unit - 7 - இந்திய தேசிய இயக்கம்
Unit - 8- தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
Unit - 9- தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
Unit - 10 திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
முதன்மை தேர்வு - விரிவான எழுத்து தேர்வாக நடைபெறும்
தலைப்பு 1 - தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
தலைப்பு 2 - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
தலைப்பு 3 - சுருக்கி வரைதல்
தலைப்பு 4 - பொருள் உணா்திறன்
தலைப்பு 5 - சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
தலைப்பு 6 – திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புக்கள் தொடர்பாக
கட்டுரை எழுதுதல்
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியேலாடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம்,
மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
தலைப்பு 7 – கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.