tnpsc, tnpsc exam, tnpsc group 2 exam, preliminary exam, main exam, interview posts , non-interview posts, டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு
கால் அணா சம்பளம்னாலும் கவர்ன்மென்ட் சம்பளம் வாங்கணும் என்பதில் உறுதியாக உள்ளவர்களுக்கு மீண்டும் வருகிறது அரசு பணிக்கான அரிய வாய்ப்பு….ஆம். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் (அக்டோபர் மாதம்) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப்பணியை எதிர்நோக்கி இருக்கும் தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்….
Advertisment
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள் என இரு பிரிவாக நடத்தப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கு சரியான மற்றும் தகுதியான ஆட்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுகள், முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நிலைத்தேர்வு, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் அமைப்பிலும், முதன்மை தேர்வு, மொழிபெயர்ப்பு, சுருக்கி வரைதல் உள்ளிட்ட பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது.
முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான சிலபஸ் எனும் பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றாய் இனி காண்போம்...
முதல்நிலை தேர்வு ( Preliminary exam) : இந்த தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடத்தப்பட உள்ளது
பொது அறிவு (General Studies)
Unit - 1 : பொது அறிவியல்
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல், - பொருள் உணராமல்,கற்றலும், கருத்துணர்ந்து கற்றலும் - கடந்த காலம்,நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்
பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள், இயக்கவியல், மின்னியல், காந்தவியல், அணுக்கரு இயற்பியல், மின்னணுவியல், தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்