/tamil-ie/media/media_files/uploads/2018/08/2-62.jpg)
சென்னை ஐகோர்ட்
TNPSC Group 2 Hall Ticket 2018 : டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு எழுத இருப்பவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை இணையத்தில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு மூலமாக 1199 பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. தேர்வு தேதி, வயது, கல்வித் தகுதி, பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் tnpsc.gov.in இணையதளத்தில் கடந்த ஆகஸ்ட் மாத வெளியாகின.
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
TNPSC Group 2 Hall Ticket 2018, How to Download Admit Card : அட்மிட் கார்ட் டவுன்லோட்!
இந்நிலையில், இந்த தேர்வுகாக விண்ணபித்து இருப்பவர்கள் தங்களது அட்மிட் கார்டை www.tnpsc.gov.in இணையதளத்தில் விரைவில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்காண ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்ய கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்!
ஸ்டெப் 1 - முதலில் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தை ஓபன் செய்யுங்கள் www.tnpsc.gov.in
ஸ்டெப் 2 - அதில் admid card ஸ்ங்கை கிளிக் செய்யுங்கள்
ஸ்டெப் 3 - தேவையான உள்ளீடுகளை கொடுத்து லாக்இன் செய்யுங்கள்
ஸ்டெப் 4 - அதிலிருந்து உங்கள் ஹால்டிக்கெட்டை டவுண்லோடு செய்யுங்கள்
குரூப்2 தேர்வுக்காண முதன்மை எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும். மேலும், நேர்முகத் தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.