/tamil-ie/media/media_files/uploads/2018/12/pic-1.jpg)
TNPSC CCSE Group II Main Exam Admit Card Released: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி, இணைக்கப்பட்ட சிவில் சர்வீஸ் குரூப் 2 தேர்வுக்கான (Combined Civil Services Examination-II) அடையாள அட்டைகளை வெளியிட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான tnspc.gov.in தளத்தில் தங்களுடைய அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இத்தேர்வு வரும் சனிக்கிழமையான 22.02.2019 அன்று நடக்கவிருக்கிறது. தேர்வு மையம் மற்றும் நேரத்தை விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாள அட்டையிலேயே தெரிந்துக் கொள்ளலாம். அதே நேரம் tnpsconline.gov.in என்ற தளத்தின் மூலமாகவும் அடையாள அட்டைகளைப் பெறலாம்.
பதிவிறக்கம் எப்படி செய்வது?
டி.என்.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான tnpsc.gov.in -ஐ விசிட் செய்யவும்.
முகப்பு பக்கத்தில், ஆன்லைன் சர்வீஸ் என்பதற்குக் கீழ் ‘hall ticket download’ என்பதை க்ளிக் செய்யவும்.
இப்போது புதிய பேஜ் திறக்கும்.
அதை ஸ்க்ரோல் செய்து ‘combined civil services exam group II interview’ என்பதில், ’download admit card' என்பதை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவ எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து லாக் இன் செய்துக் கொள்ளவும்.
இப்போது ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
விண்ணப்பதாரர்கள் இதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.