தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை 5,529 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முன்கூட்டியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/document/Certificateverification/2022_03_GR_II_MAINS_OT_PUB_LIST_2K24.pdf என்ற இணையதளப் பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதற்கிடையில் குரூப் 2, 2ஏ பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 6151 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 161 நேர்காணல் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்களின் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள், நேர்காணல் முடிந்த பிறகு அறிவிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“