Advertisment

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்கள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்

author-image
WebDesk
New Update
TNPSC

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதமாகி வரும் நிலையில், இணையத்தில் இது தொடர்பான மீம்ஸ்கள் தெறிக்கின்றன.

Advertisment

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்த வகையில் இரண்டாம் நிலையில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 9 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.

இதற்கான தேர்வு முடிவுகள், பெண்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால், இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தேர்வாணையம் குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. இருப்பினும் இது நீண்ட காலம் என்றும், ஏற்கனவே தேர்வு அறிவிப்பிலிருந்து தற்போது வரை ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் தேர்வர்கள் கூறின. மேலும் நேர்காணல், சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வு எல்லாம் முடித்து பணியில் சேர இன்னும் கால தாமதம் ஆகும் என்றும் வேதனை தெரிவித்தனர்.

இந்தநிலையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ”குரூப் 2 முதன்மைத் தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கு மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு சுமார் 6000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்படும்என்று கூறியிருந்தார்.

இதனால், தேர்வர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இருப்பினும் டிசம்பர் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனையடுத்து 2 ஆவது வாரத்திலாவது வெளியாகும் என்று எதிர்ப்பார்த்தனர். குறிப்பாக டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை என்பதால், அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். மேலும் வருடாந்திர அட்டவணையும் நேற்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால், அதனையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இரண்டும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், நேற்று காலை அமைச்சர் தங்கம் தென்னரசு, குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் தாமதம் குறித்து தேர்வாணையம் அறிக்கை அளிக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இதுதொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

இதனால் மனமுடைந்த தேர்வர்கள் குரூப் 2 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை வெளிப்படும் விதமாக எக்ஸ் தளத்தில் #WeWantGroup2Results என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் காலி இடங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் தாமதம் தொடர்பாக மீம்ஸ்களும் இணையத்தில் வலம் வருகின்றன. குறிப்பாக யூ.பி.எஸ்.சி தேர்வுகள் திட்டமிட்டப்படி நடந்து வரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் மட்டும் காலதாமதம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment