தேர்வன் : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் மொழித்தாள் நீக்கியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, பொது அறிவு தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆகையால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தேர்வர்களுக்கு பொது அறிவு தொடர்பான கேள்விகளையும், அதில் எவ்வாறு தயாராகுவது, எந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தது …போன்ற முக்கியாமான டிப்ஸ்களோடு அடிக்கடி உங்களை சந்திக்க இருக்கிறோம்.
இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.
நேற்று கேட்கப்பட்ட கேளிவிகளுக்கு விடைகள் இங்கே
- தொலைதொடர்புத் துறை & மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
- 30 ஜூன் 2020
- பிபெக் டெப்ராய்
- 2020-2025
- தூய்மை இந்தியா ( swachh bharat)
அக்டோபர், 2 கேள்விகள் :
- உலகளாவிய கோல் கீப்பர் விருது யாரால் கொடுக்கபடுகிறது?
- பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனம்
- ரிலையன்ஸ் நிறுவனம்
- இந்திய அரசால்
- விப்ரோ நிறுவனம்
2. நடந்து முடிந்த சிஓபி 14 மாநாட்டில் ( COP 14 )- 2021 மற்றும் 2030 க்கு இடையில் இந்தியா எத்தனை லட்சம் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை(degraded land) புத்துயிர் பெற உறுதிபூண்டுள்ளது ?
- 10 லட்சம்
- 50 லட்சம்
- 20 லட்சம்
- 100 லட்சம்
3. எந்த அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக இல்லை?
- சார்க் ( SAARC)
- ஜி - 20 ( G 20 )
- ஏசியன் (ASEAN)
- எஸ்சிஓ ( SCO)
4. "பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்" என்பதை எந்த சரத்தில் வெளிப்படையாக சொல்லப்பட்டுள்ளது
- சரத்து 14
- சரத்து 21
- சரத்து 32
- சரத்து 47
5. எட்டு கோர் தொழில்களின் அட்டவணை ( Index of core Industries) எத்தனை மாதங்களுக்கு ஒரு முறை வெளியப்படுகிறது .
- 1 மாதம்
- 3 மாதம்
- 12 மாதம்
- 6 மாதம்