டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் : தேர்வர்களே இந்த செய்தி உங்களுக்குத்தான்..

TNPSC Group 2 exam pattern : குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டு, முதன்மை தேர்வில் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

tnpsc, tnpsc examinations, tnpsc group 2 examinations, exam pattern, changes, preliminary exam, main exam, syllabus, applicants
tnpsc, tnpsc examinations, tnpsc group 2 examinations, exam pattern, changes, preliminary exam, main exam, syllabus, applicants, டிஎன்பிஎஸ்சி, குரூப்2 தேர்வு, தேர்வு நடைமுறை, மாற்றம், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, பாடத்திட்டம், தேர்வர்கள், தகுதித்தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வில், முதன்மைத் தேர்வுக்கான தேர்ச்சி நடைமுறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டு, முதன்மை தேர்வில் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் குரூப் 2 தேர்வு மற்றும் குரூப்2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அரசு பணியை கனவாக கொண்டு படித்து வரும் அனைத்து தேர்வர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

குரூப் 2 தேர்வு, முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. முதனிலைத்தேர்வுக்கு ஏற்கனவே தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது. தமிழகத்தின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினாத்தாள்: தேர்வர்களின் தகவலுக்காகவும், அவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் முதனிலைத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இந்த மாத இறுதியில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வுக்கு தயாராவதற்கு தேர்வர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்படும்.

புதிய மாற்றம் : முந்தைய மாற்றத்தின்படி, முதன்மைத் தேர்வானது ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இரண்டு தேர்வுகள் கொண்டதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எற்கனவே அறிவிக்கப்பட்ட முதன்மை எழுத்துத்தேர்வின் பகுதி-அ மட்டும் தனித்தாளாக, தகுதித்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

அதாவது தமிழில் இருந்து ஆங்கிலம், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் ஆகியவற்றில் மொழிபெயர்ப்பு செய்யும் பகுதியானது 100 அதிகபட்ச மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இந்த தேர்வில் தகுதிபெற 25 மதிப்பெண்கள் அவசியம் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் 25 பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும்.

ஒரே தேர்வாக அறிவிக்கப்பட்டிருந்த, முதன்மை எழுத்துத் தேர்வு, இரண்டு தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, முதன்மை எழுத்துத் தேர்வின் முதல் பகுதி, தனித் தாளாகவும், தகுதித் தேர்வாகவும் மாற்றப்பட்டுள்ளது.இந்த தேர்வு, அதிகபட்சம், 100 மதிப்பெண்களுக்கு, ஒன்றரை மணி நேரம் நடக்கும். இந்த தேர்வில், குறைந்தபட்சம், 25 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தகுதி பெற முடியும். இந்த தகுதி மதிப்பெண்கள், தேர்வரின் தரவரிசை நிர்ணயத்திற்கு கணக்கில் எடுக்கப்படாது.அதேபோல், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, பட்டப் படிப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு தரத்துக்கு, தேர்வின் தரம் மாற்றப்பட்டுள்ளது. இதன் வழியாக, தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்த மாணவர்களால் மட்டுமே, இதில் தேர்ச்சி பெற முடியும்.2ம் தாள் தேர்வு பாடத்திட்டத்தின் மற்ற பகுதிகள் அனைத்தும், இரண்டாவது தாளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் நடக்கும்.

இதில் பெறும் மதிப்பெண்களே, தரவரிசைக்கு கணக்கில் எடுக்கப்படும்.முதல் நிலை தேர்விலும், முதன்மை எழுத்து தேர்விலும், தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், தமிழர் நாகரிகம், பண்பாடு, சங்க காலம் தொடங்கி, தற்போது வரை, தமிழ் மொழி மற்றும் இலக்கியம் அறிந்திருக்க வேண்டும். தமிழகத்தின் கலை மரபுகள், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை, நன்கு அறிந்திருக்க வேண்டும்.எனவே, தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, டிஎன்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 2a exam pattern changes in syllabus

Next Story
#GadgetFreeHour பிரச்சாரத்தில் தமிழக அரசு பள்ளிகள் – சுற்றறிக்கை வெளியீடுடிஸ்கனக்ட் டு ரீகனக்ட்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com