குரூப் 2ஏ தேர்வு முறைகேடு: மாநிலத்தில் 3-வது இடம் பிடித்தவர் கைது

கைது செய்யப்பட்ட வேல்முருகன் எஸ்.ஐ சித்தாண்டியின் சகோதரர் ஆவார். குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திருவராஜ் சர்ச்சையின் போதே  சித்தாண்டியின் பெயர் அடிப்பட்டது.

Tnpsc,tnpsc scam,
Tnpsc,tnpsc scam, tnpsc group 2A Exam scam, magic pen

தொழில் மற்றும் வணிகத்துறை, பதிவுத்துறை, தொழிலாளர் நலத்துறை போன்ற அரசு பணிகளுக்கு 2017ல் நடத்தப்பட்ட குரூப் II தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்த டிஎன்பிஎஸ்சி  சில நாட்களுக்கு முன்பு தமிழக சிபிசிஐடி காவல் துறையை நாடியது.

வழக்கை பதிவு செய்து விசாரணையைத்  தொடங்கிய சிபிசிஐடி  வேல்முருகன், ஜெயராணி ஆகியோரை தற்போது கைது செய்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த வேல்முருகன் டிஎன்பிஎஸ்சி குரூப் II-ஏ தேர்வில், முறைகேடுகளில் ஈடுபட்டு  மாநில அளவில் 3-வது இடத்தையும், ஸ்ரீவிலிபுதூரைச் சேர்ந்த ஜெயராணி முறைகேடுகளில் ஈடுபட்டு  21வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது .  2017 குரூப் II தேர்வில் 42 தேர்வர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு

கைதான இவர்களும் 2017 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் II-ஏ தேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கைதான இவர்களும் தற்போது அரசு பணியில் இருப்பவர்கள்.  வேல்முருகன் காரைகுடி இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகவும், ஜெயராணி  திருநெல்வேலி இணை  சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராகவும் அலுவல உதவியாளராகவும் பணி புரிந்தனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு – அதிரடி நடவடிக்கையை துவங்கியது சிபிசிஐடி

வேல்முருகள் எஸ்.ஐ சித்தாண்டியின் சகோதரர்:   

கைது செய்யப்பட்ட வேல்முருகன் எஸ்.ஐ சித்தாண்டியின் சகோதரர் ஆவார். குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த திருவராஜ் சர்ச்சையின் போதே  சித்தாண்டியின் பெயர் அடிப்பட்டது. சித்தாண்டியை சிபிசிஐடி காவல் துறையினர் வலை விரித்து தேடிவருகின்றனர். இந்நிலையில் தான், சித்தனியின் சகோதரர் வேல்முருகன் குரூப் II-ஏ தேர்வில் முறைகேடு செய்துள்ளதாக கைது செய்யப் பட்டிருக்கிறார்.  ஜெயராணியின் கணவரும் காவல்துறையை சேர்ந்தவர் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

சித்தாண்டி – எஸ்.ஐ

முகப்பேரில் வசிக்கும்  ப்ரோக்கர் எஸ்.ஜெயக்குமார் வீட்டை சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சில ஆவணங்களைத் தாண்டி, அறுபது வகையான சிறப்பு பேனாக்கள், ஒரு மடிக்கணினி, பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

டி.என்.பி.எஸ்.சி ஊழலில் இதுவரை 12 பேர் கைது: ‘மேஜிக் பேனா’ கொடுத்த ஜெயகுமாருக்கு வலைவீச்சு

குரூப் 4 இடைத்ததரகர் ஜெயகுமாரை பற்றி துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயக்குமார், எஸ்.ஐ. சித்தாண்டி ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், முறைகேடுகளின் ஒட்டுமொத்த தன்மையும் விரைவில் வெளியாகும் என்று சிபிசிஐடி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 2a exam scam chithaandi brother velmurugan arrested

Next Story
சென்னை பல்கலைக்கழக தேர்வுமுடிவுகள் வெளியீடு – எளிய முறையில் பார்க்க வசதி…Madras university results,Madras University result,Madras University,unom.ac.in,university of madras
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com