குரூப் 2/2A தேர்வு முறை மாற்றம், தேர்வர்களிடம் கருத்து கேட்கும் டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி மெயின்ஸ் முதல் தாள் பற்றி மாற்றுக் கருத்து சொல்ல விரும்பினால் தேர்வர்கள் www.tnpscexams.in போர்டலுக்கு சென்று வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் சொல்லலாம் .
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதல்நிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றும் அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
Advertisment
இதில், முதன்மை தேர்வு இரண்டு பேப்பர்களாக நடத்தப்படுகின்றது.
தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு முதல் தாளாக இருக்கும். சுருக்கி வரைதல், கட்டுரை எழுதுதல், குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல், திருக்குறள் பற்றிய கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் போன்றவைகள் இரண்டாம் தாளாக இருக்கும்.
முதல் தாளில் குறைந்த பட்சம் தேர்வர்கள் 100க்கு 25 மதிப்பெண்கள் கட்டாயம் எடுத்தல் வேண்டும். இல்லாவிட்டால், இரண்டாம் தாள் திருத்தப்படாது.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி : ietamil வீடியோ
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முதல் பற்றி கருத்து கேட்க முன்வதுள்ளது. முதல் தாள் பற்றி மாற்றுக் கருத்து சொல்ல விருப்பமுள்ள உள்ள தேர்வர்கள் www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையமுகவரிக்கு சென்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
இந்த கருத்துகேட்கும் பணி நவம்பர் 25 (திங்கட்கிழமை ) முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும். தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி போர்டலுக்கு சென்று, யூசர் எண் மற்றும் கடவுசொல்லை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு பாடத்திட்டத்தை மாற்றியதால் தமிழ் மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து இதற்கு பதிலும் கொடுக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்து தேர்வில் , தேர்வர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், தமிழர் நாகரிகம், பண்பாடு, தமிழில் எழுதும் திறன், சமூக பொருளாதார வரலாறு, திருக்குறள், சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு ஆகியவற்றை, நன்கு அறிந்திருக்க வேண்டும்.எனவே, தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்திருந்தன.