தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசில் உள்ள பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் இதர தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்த அனைத்து விதமான தேர்வுகளிலும் இந்தாண்டு முதல் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சி கட்டாயம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது..
அதன்படி, அண்மையில் குரூப்-1, 2 மற்றும் 2ஏ உள்பட சில பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது குரூப்-3, 4, 7-பி, 8 போன்ற பதவிகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்ச்சிக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் www.tnpsc.gov.in என்கிற டிஎன்பிஎஸ்சி தளத்தில் காணலாம்.
தமிழ் மொழி தகுதித்தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அதற்கடுத்த ‘பி’ பிரிவில் எழுதிய விடைத்தாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டு, பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்தியாவின் வரலாறு - பண்பாடு, இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்தியத் தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள், திருக்குறள், தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம், திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் என்ற தலைப்புகளில் பாடத்திட்டம் அமைந்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகவுள்ளது. மாணவர்கள், தற்போதே புதிய நடைமுறைக்கு ஏற்றப்படி, தமிழ்தாளில் தேர்ச்சி பெறும் வகையில் பாடங்களை படித்து தயாராக வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil