scorecardresearch

TNPSC குரூப் 3 தேர்வு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பம் செய்வது எப்படி?

TNPSC குரூப் 3 தேர்வு; கூட்டுறவுத்துறை மற்றும் தொழில்துறை பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC குரூப் 3 தேர்வு; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; விண்ணப்பம் செய்வது எப்படி?

TNPSC Group 3 exam 2022 how to apply online: தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் அடங்கிய குரூப் 3 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத்துறை பண்டக காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.10.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC வேலைவாய்ப்பு; டிகிரி தகுதிக்கு 217 பணியிடங்கள்; விண்ணப்பம் செய்வது எப்படி?

இளநிலை ஆய்வாளர் – கூட்டுறவுத்துறை (Junior Inspector)

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 37 வயதிற்குள்ளும், MBC, BC, BCM பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 75,900

பண்டக காப்பாளர் – தொழில் மற்றும் வர்த்தகத்துறை (Store Keeper)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 47 வயதிற்குள்ளும், MBC, BC, BCM பிரிவினர் 44 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 75,900

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி பொதுத் தமிழ். இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.

இரண்டாம் பகுதி பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2022

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 3 exam 2022 how to apply online