Advertisment

TNPSC Group 4 2019 Syllabus: ஆங்கிலம், அறிவியல், அரசியல் கொஞ்சம் வரலாறு! - டி.என்.பி.எஸ்.சி குரூப் 4-க்கு அப்ளை செய்யுங்கள்!

TNPSC Group 4 2019: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வி.ஏ.ஓ உட்பட அனைவருக்கும் 19,500 முதல் 62,000 வரை சம்பளம் கிடைக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4 Recruitment Notification

tnpsc, Tamil Nadu Public Service Commission, டி.என்.பி.எஸ்.சி., tnpsc group 4, tnpsc notification, www.tnpsc.gov.in, tnpsc group 4 exam 2019, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc portal, group 4 exam, www.tnpsc.gov.in 2019, group 4 2019 notification, தமிழ்நாடு குரூப் 4 தேர்வு, tnpsc group 4 2019 notification, tnpsc.gov.in, tnpsc notification 2019

TNPSC 2019 Group 4  Notification Released: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

Advertisment

ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தாங்களே ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளும்படியும், முகவர்கள், ஏஜென்ஸிகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. குரூப் 4 தேர்வில் மொத்தம் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

TNPSC Group 4 2019 Public Service Commission Notification Released: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு எப்படி அப்ளை செய்வது?

காலியிடங்கள்

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397

ஜூனியர் அஸிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688

பில் கலெக்டர், கிரேட் – I – 34

ஃபீல்டு சர்வேயர் – 509

டிராஃப்ட்ஸ்மேன் – 74

டைப்பிஸ்ட் – 1901

ஸ்டெனோ டைபிஸ்ட் – 784

ஆகிய எண்ணிக்கையில் காலியிடங்கள் இருக்கின்றன.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி - முழுத்தகவல்கள்

முக்கியத் தேதிகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 14.07.2019

தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – 16.07.2019

தேர்வு நடைபெறும் நாள் – செப்டம்பர் 1, 2019

சிலபஸ்

பொது அறிவியல்

இப்பிரிவில் இயற்பியல், வேதியல், தாவரவியல் மற்றும் உயிரியல் பிரிவிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

TNPSC General science Syllabusகரெண்ட் ஈவெண்ட்டுகளில் எக்கணாமிக்ஸ், ஜியோகிராஃபி, பொலிட்டிக்கல் சயின்ஸ், வரலாறு ஆக்கியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

TNPSC group 4 syllabus Current Eventsபொது ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, பார்ட் ஏ,பி,சி என மூன்று பிரிவுகள் முறையே இலக்கணம், இலக்கியம், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய பணிகள் என பிரிக்கப்பட்டிருக்கும்.

TNPSC English Syllabusடி.என்.பி.எஸ்.சி குரூப் 4 சம்பள விபரம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வி.ஏ.ஓ உட்பட அனைவருக்கும் 19,500 முதல் 62,000 வரை சம்பளம் கிடைக்கும். ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேட் 3-யில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 20,600 முதல் 65,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

Tnpsc Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment