TNPSC Group 4 Official Answer Key 2019 @ tnpsc.gov.in, How To Download: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் இன்று வெளியானது. டி.என்.பி.எஸ்.சி அதிகாரபூர்வ இணையதளத்தில் அதிகாரபூர்வ விடைத்தாளை செக் செய்யும் முறை இங்கே தரப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி எனப்படுகிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வை கடந்த 1-ம் தேதி நடத்தியது. தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர்.
How To Download tnpsc group 4 official answer key 2019: இணையதளத்தில் ‘செக்’செய்யும் முறை
வழக்கமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய 4 நாட்களில் ‘ஆன்ஸ்வர் கீ’ எனப்படுகிற அதிகாரபூர்வ விடைத்தாளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த முறை 10 நாட்களை எடுத்துக்கொண்டு இன்று (செப்டம்பர் 10) தனது இணையதளத்தில் அதிகாரபூர்வ விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
13 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் இதற்காகவே காத்திருந்தனர். ஆன்ஸ்வர் கீ அடிப்படையில் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண்ணை தோராயமாக கணக்கிட முடியும். ஆன்ஸ்வர் கீ-யில் தவறுகள் இருப்பின் செப்டம்பர் 17-ம் தேதிக்குள் முறையிட கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ஆன்ஸ்வர் கீ-யை இணையதளத்தில் ‘செக்’செய்யும் முறை இங்கே தரப்படுகிறது.
1. அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in க்கு செல்லுங்கள்
2. ‘டவுன்லோட்’ (Answer Key) என்ற இணைப்பைக் கிளிக் செய்க
3. ஒரு பி.டி.எஃப் பைல் உங்கள் திரையில் தோன்றும்
4. அதைப் பதிவிறக்கி, பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
தேர்வர்களே, இறுதி செய்யப்பட்ட விடைத்தாளின் (Answer Key) அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் தற்காலிக பட்டியலை டிஎன்பிஎஸ்சி ஆணையம் வெளியிடும். இந்த விடைத்தாளில் தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருப்பின் வருகிற 17-ம் தேதிக்குள் முறையிட்டு தீர்வு தேடிக் கொள்ளுங்கள்.