தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 7ம் தேதி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களுக்கான எண்ணிக்கையை அதிகரித்தது. இந்த கூடுதல் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களின் தரவரிசைப் பட்டியல் கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு பட்டியலில் இடபெற்ற மாணவர்கள் நாளைக்குள் தங்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை அருகில் இருக்கும் இ-சேவை மூலமாக ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வு பட்டியலை அணுக இங்கே கிளிக் செய்யவும்
என்ன நடந்தது ? 6491 காலிபணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு 01.09.2019 அன்று நடைபெற்றது. 12.11.2019 ஆண்டு இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் அன்று வெளியிடப்பட்டு தற்காலிகமாக தகுதி பெற்ற தேர்வர்கள் 05.12.2019 முதல் 18.12.2019 வரை அர்குயல் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலம் ஒரிஜினல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டார்கள்.
25.11.2019 அன்று இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9398 ஆக உயர்த்தப்பட்டது. 07.02.2020 அன்று காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9882 ஆக உயர்த்தப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அதாவது, குரூப்-4 பல்வேறு துறைகளில் உள்ள 484 கூடுதல் பணியிடங்கள்.
இந்த கூடுதல் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தற்காலிக தேர்வர்களின் இறுதி பட்டியலை 12-02-2020 அன்று வெளியிட்டது. இவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றிதழை பிப்ரவரி -18ம் தேதிக்குள் அருகில் இருக்கும் இ-சேவை மையம் மூலமாக ஸ்கேன் செய்து டிஎன்பிஎஸ்சிக்கு பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
யார் ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும்: ஏற்கனவே இந்த தேர்வுக்கு தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்கள் தற்போது மீண்டும் அனுப்பத் தேவையில்லை. புதிதாய் தேர்வாகிய மாணவர்கள் மட்டும் தங்களது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பினால் போதும்.