scorecardresearch

TNPSC Group 4 : குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்; 10 பதவிக்கு 25 பேருக்கு அழைப்பு

கடந்த மார்ச் 24-ந் தேதி குருப் 4 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC
TNPSC

குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 10 பதவிக்கு தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக  25 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த சில வராங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலானவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று புகார் எழுந்தது.

இதனிடையே கடந்த மார்ச் 24-ந் தேதி தேர்வு முடிவு வெளியானாலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் அடுத்ததாக ஏப்ரல் 13-ந் தேதி முதல் ஆன்லைனில் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக கடைசி தேதி மே 5. ஆகும்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி உள்ளவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள அனைவரும் அருகில் உள்ள இ.சேவை மையங்களில் தங்களது சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம். பதிவேற்றம் முடிந்தவுடன் பதிவு செய்யப்பட்ட மொமைல் நம்பருக்கு குறுஞ்செய்து அனுகப்பப்படும்.

மொத்தம் 7301 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 10 பதவிக்கு 25 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 4 certificate verification list released now