TNPSC Group 4 Certificate Verification: எந்தெந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் ?

TNPSC Group 4 : டிசம்பர் 5 முதல் 18 மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை என்றால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர விருப்பமில்லை என்று டிஎன்பிஎஸ்சி கருதிக் கொள்ளும்.

TNPSC Group 4 Original Documents Needed To Upload : 2018-2019 மற்றும் 2019-2020 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) – ல் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டது.

தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள்  05.12.2019 முதல் 18.12.2019 அன்று மாலை 5.30 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன்(Scan) செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்யக் கேட்டுக்கொண்டிருந்தது.

தேர்வர்கள், இந்த நாட்களுக்குள் (டிசம்பர் 5 முதல் 18)  மூலச் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை என்றால் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர விருப்பமில்லை என்று டிஎன்பிஎஸ்சி கருதிக் கொள்ளும்.  இதனால், மறக்காமல் தேர்வர்கள் பதிவெற்றம் செய்யும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதிவேற்றம் செய்யவேண்டிய சான்றிதழ்கள் :   

  1. பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Mark Sheet
  2. அடிப்படைக் கல்வித் தகுதியான SSLC அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல்/ சான்று.
  3. HSC அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல்/ சான்று
  4. விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள கல்வித்தகுதியின்  Consolidated Mark sheets / Provisional Certificate/Convocation Certificate பதிவேற்றம் செய்ய வேண்டும் (Diploma/UG/PG/M.Phil/Phd)
  5. கணினி சான்றிதழ்  “Office Automation” (உங்களிடம் இருந்தால் )
  6. Training Certificate in survey obtained from ITI in Tamil Nadu.(If applicable).
  7. (i) சுருக்கெழுத்துத் தட்டச்சர், நிலை- III பதவிக்கான அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சி சான்றிதழ்கள்.(Typewriting – Tamil Junior & Senior Grade, Typewriting – English Junior & Senior Grade, Shorthand – Tamil Junior & Senior Grade, Shorthand – English Junior & Senior Grade) ஆகிய சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  8. தட்டச்சர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சி சான்றிதழ்கள்.(Typewriting – Tamil Junior & Senior Grade, Typewriting – English Junior & Senior Grade,) ஆகிய சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  9. சாதி சான்றிதழ் – விண்ணப்பத்தாரருக்கான அறிவுரைகள் (Instructions to Applicants) பத்தி 15(ஊ)-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பெறப்பட்டதாக இருக்கவேண்டும்.
  10. விண்ணப்பதாரர் முன்னாள் இராணுவத்தினர் எனில் அன்னாரின் PPO, Ex-servicemen Book மற்றும்/ Bonafide சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. (முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் – முன்னாள் இராணுவத்தினராக கருதப்பட மாட்டார்.)
  11. விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளி எனில் உரிய மருத்துவக் குழுவிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதில் உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with percentage of disability) (தேர்வாணையத்தின் விண்ணப்பத்தார்களுக்கான அறிவுரைகள் பத்தி எண். 14(ஆ)ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு)
  12. ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று (Destitute Widow), (விளக்கம்: “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும். இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் (அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்). இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும். விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்.
  13. விண்ணப்பத்தாரர் திருநங்கையெனில் திருநங்கைக்கான ID Card மற்றும் அரசாணைகள் 1) G.O.(MS) No.28, BC, MBC, and Minorities Welfare (BCC) Department Dated: 06.04.2015, 2) G.O.(MS) No.90, Social Welfare and Nutritious Meal Programme (SW8(2)) Department Dated:22.12.2017 – படி சாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் திருநங்கை விண்ணப்பதாரர் ஆண் இனத்தவராக கருத வேண்டுமா அல்லது பெண் இனத்தவராக கருத வேண்டுமா என்பதற்கான விருப்ப கடித நகல் ஒன்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  14. விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டது போன்று கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  15. தடையின்மைச் சான்றிதழ் (NOC). இந்த தேர்விற்கான அறிவிக்கை தேதிக்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அவர்களது பணி விவரங்கள் (பணியில் சேர்ந்த நாள், பணிபுரியும் துறை/ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா/(NOC வழங்கப்பட்டுள்ளதா) எழுத்துப்பூர்வமாக தெரிவித்து அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 4 certificate verification tnpsc group 4 required document uploads

Next Story
எந்த தேர்வும் இல்லை, 1508 அரசு பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம்!medical services recruitment board, www.mrb.tn.gov.in 2019 notification, www.mrb.tn.gov.in 2019 lab technician 1508 post
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com