TNPSC Group 4 counselling date : 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி குரூப் 4 பிரிவில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 8 வகையான பணிகளுக்கான 9351 காலியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
அந்த தேர்வின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது டி.என்.பி.எஸ்.சி. இதில் தட்டச்சர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டங்களுக்காக அழைக்கப்படும் தேர்வர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
www.tnpsc.gov.in இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த பட்டியலில் தேர்வர்களின் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சௌ மதிப்பெண்கள், முதுநிலை தேர்ச்சி மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை எண், இட ஒதுக்கீடு அடிப்படை ஆகியவை இடம் பெற்றுள்ளது.
TNPSC Group 4 counselling date
பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுகள் வருகின்ற 21ம் தேதி முதல் சென்னை பாரிமுனையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதங்களை பதிவிறக்கம் செய்து கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்றால் மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9,321 பணியிடங்களுக்கான பணி நியமனம் பிப்ரவரி மாத இறுதிக்குள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்றும் அறிவித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.
மேலும் படிக்க : வேளாண் பாடம் படித்தவர்களுக்கு உதவியாளர் பணி வழங்குகிறது தமிழக அரசு