TNPSC Group 4 Exam CVlist 2019 updates : தமிழ்நாடு தேர்வாணையம் குரூப் 4 நான்கு தேர்வு முடிவுகளை கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 9398 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றது . இந்த காலி பணியிடங்களுக்கு லட்சக் கணக்கான தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது என்றால் அது மிகையாகாது.
Advertisment
இந்த, 9398 காலி பணிஇடங்களும் சமூக நீதிக்காக வகுப்பு வாரியாக பிரிக்கப்படுகின்றன. எந்தெந்த பிரிவி தேர்வர்களுக்கு, எத்தனை காலியிடங்கள் போன்ற தகவல்களையும் இங்கே காணலாம்.
உதாரணமாக, மொத்த காலி இடங்களில் பொது பிரிவினருக்கு 31 சதவீதமும், பி.சி பிரிவினருக்கு 26.5 சதவீதமும், பி.சி( முஸ்லிம்) 3.5 சதவீதமும், எம்.பி.சி பிரிவினருக்கு 20 சதவீதமும், எஸ். சி பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.சி (ஏ) பிரிவினருக்கு 3 சதவீதமும், எஸ்.டி பிரிவினருக்கு 1 சதவீதமும் பிரித்துக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சதவீதத்தை எண்ணிக்கையில் மாற்றினால், 9398 என்ற மொத்த காலி பணியிடங்களில்
பொது பிரிவினருக்கு - 2913 ( கட் ஆப் ஆண்களுக்கு 175+/- 3, பெண்களுக்கு 172 +/- 3)
பி.சி - 2490 ( கட் ஆப் - ஆண்களுக்கு 172+/- 3 , பெண்களுக்கு - 169 +/- 3)
பி.சி (முஸ்லிம்) - 329 ( கட் ஆப் - ஆண்களுக்கு 165+/- 3 , பெண்களுக்கு - 162 +/- 3)
எம்.பி.சி - 1880 ( கட் ஆப் - ஆண்களுக்கு 170 +/- 3 , பெண்களுக்கு - 169 +/- 3)
எஸ்.சி - 1410 ( கட் ஆப் - ஆண்களுக்கு 165 +/- 3 , பெண்களுக்கு - 158 +/- 3)
எஸ்.சி ( ஏ) - 282 ( கட் ஆப் - ஆண்களுக்கு 162 +/- 3 , பெண்களுக்கு - 158 +/- 3)
எஸ்.டி - 94 ( கட் ஆப் - ஆண்களுக்கு 160 +/- 3 , பெண்களுக்கு - 155 +/- 3)
போன்ற கணக்கில் காலிப் பணியிடங்கள் பங்கிடப்படாலம் என்று நம்பப்படுகிறது .
சிறு குறிப்பு:
இந்த இணைய முகவரிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை நிரப்பினால், உங்கள் மதிப்பெண்ணும், உங்கள் ரேங்க் பட்டியலையும் உங்கள் கண்முன்னே காட்சிக்கு வரும். இந்த ரேங்க் பட்டியலில் மாநில வாரியாகவும் , ஜாதி பிரிவு வாரியாகவும் காண்பிக்கப்படும்.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?