டிஎன்பிஎஸ்சி தேர்வரா நீங்கள் - உங்கள் மதிப்பெண் சந்தேகத்தை தீர்க்க இதோ வழிமுறை....
TNPSC group 4 answer key objection : தேர்வர்கள், விரைந்து செயல்பட்டு மதிப்பெண் குறித்த சந்தேகங்களை விரைவில் நிவர்த்தி செய்துகொண்டு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (ஆன்சர் கீ) வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த சந்தேகம் மற்றும் மறுமதீப்பீடு குறித்த தகவல்கள் இதோ உங்களுக்காக....
Advertisment
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
என மொத்தம் 6,491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 16 லட்சம் தேர்வர்கள் தே்ர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ( ஆன்சர் கீ) சமீபத்தில், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வர்கள், இந்த ஆன்சர் கீயில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, இந்த ஆன்சர் கீ குறித்த சந்தேகங்களை, தேர்வர்கள், செப்டம்பர் 17ம் தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மதிப்பெண் குறித்த சந்தேகங்களை, தேர்வர்கள் எளிதாக நிவர்த்தி செய்துகொள்ளும்பொருட்டு, டிஎன்பிஎஸ்சி, அதற்காக பிரத்யேக இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது.
மதிப்பெண் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் முறை
2. தேர்வர்கள், தங்களது பதிவு எண் மற்றும் விண்ணப்ப எண் உள்ளிட்டவைகளை கையிலேயே வைத்து கொள்ளவும்.
3. பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை பதிவிடவும்
4. பாடத்தை தேர்வு செய்யவும்.
5. எந்த வினாவில் சந்தேகம் உள்ளது என்பதை பதிவிட்டு சப்மிட் பட்டனை அழுத்தவும்.
இந்த வழிமுறைகளை, தேர்வர்கள், செப்டம்பர் 17ம் தேதிக்குள் செய்துவிட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள், விரைந்து செயல்பட்டு மதிப்பெண் குறித்த சந்தேகங்களை விரைவில் நிவர்த்தி செய்துகொண்டு தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.