தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கா அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதனால், குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அண்மையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று அரசுப் பணிக்கான போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணையத் தலைவர் பாலச்சந்திரன், குரூப் 4 தேர்வுக்காண அறிவிப்பை இன்று வெளியிட்டார். மேலும், போட்டித் தேர்வர்கள் குரூப் 4 தேர்வுக்கு நாளை (மார்ச் 30) முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
குரூப் 4 பணியிடங்கள்மொத்தம் 7,382 காலி இடங்கள் உள்ளன. அனைத்து இடங்கக்கும்தேர்வு நடத்தப்படும். இதில் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"