அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் IV தேர்வு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வில் கலந்து கொண்ட சிலர் இந்த வருட வினாத் தாள் " வினாத்தாள் ஈஸியும் இல்லை, கடினமும் இல்லை" என்று தங்களது அனுபவத்தை பகர்கிந்துள்ளனர். ஏனெனில், பிரச்சனை கேள்வியில் இல்லை அந்த கேள்விக்கு கொடுக்கப்பட்டுள்ள சாய்ஸ்கள் தான்.
அம்பத்தூர் செயின்ட் மேரி பள்ளியில் தேர்வெழுதிய சாந்தி என்ற தேர்வர் "எல்லா சாய்ஸ்களும் ஒரியா மாதிரியாகவும், அதிகம் யோசிக்க வைத்ததாகவும், 30 கேள்விகளுக்கு மேல் சாய்ஸ்ககளை எலிமினேட் செய்ய முடியவில்ல" என்று கூறினார்.
இந்த ஆண்டு நடைபெற்றத் தேர்வில் 13.59 லட்சம் தேர்வர்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் சென்னையில் தான் அதிகமானோர் தேர்வு எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் ஒன்று அன்று சென்னை சாலைகளும், பேருந்துகளும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களால் பயணப்பட்டது என்றால் அது மிகையாகது.
வரலாற்றிலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்படுள்ளதால் இந்த முறை தேர்வுதாள்கள் மாணவர்களுக்கு எளிதகாவே இருந்திருக்கும். வழக்கம் போல் பொதுத் தமிழ் பிரிவு யூகிக்க கூடிய வகையில் இருந்ததினால் தேர்வர்களுக்கு அது கூடுதல் பலமாகவே இருந்திருக்கும்.
ஆயிரம் இருந்தாலும், டிஎன்பிஎஸ்சி-டிஎன்பிஎஸ்சி தான். 150 கேள்விகளை எளிதாக கேட்டுவிட்டு 50 கேள்விகளில் நம்மை சுத்த வைக்கும் வித்தையும் தேர்வில் நடந்திருக்கிறது. அதேபோன்று, மல்டிபிள் சாய்ஸ் கேள்வியில் நான்கு சாய்ஸ்ம் அதன் பல்லைக் காட்டி சிரித்தது வேதனையாக இருந்தது என்று சிலர் தெரிவித்தனர்.