குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் அடங்கிய வனக் காப்பாளர், வனக் காவலர் பதவிகளுக்கான கலந்தாய்வுக்கு சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய மார்ச் 9 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
குரூப் 4 பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், பழங்குடியின இளைஞர்களுக்கான வனக்காவலர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்களின் உரிய சான்றிதழ்களை குறைபாடாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக வரும் 9 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை ஒருமுறை பதிவு வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.