TNPSC Group 4 Hall Ticket released : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.எனவே ஹால்டிக்கெட்டை எவ்வாறு டவுன்லோடு செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுகள் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. 7382 பணியிடங்களுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?
குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
அங்கு முகப்பு பக்கத்தில் ஹால் டிக்கெட் டவுன்லோட் (Hall Ticket Download) என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது வேறு ஒரு பக்கம் திரையில் காண்பிக்கப்படும். அங்கு நிரந்தர பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் பயனர் ஐ.டி (User ID) மற்றும் கடவுசொல் (Password) உள்ளிட்டு, திரையில் கேட்கப்படும், கேப்சா வினாவிற்கு விடையளித்து உள் நுழைய வேண்டும்.
இல்லை எனில் நேரடியாக முகப்பு பக்கத்தில் நிரந்தர பதிவு விவரங்கள் (Registered User) என்பதை கிளிக் செய்து உள் நுழைய வேண்டும்.
தற்போது, உள் நுழைந்தவுடன் டாஷ்போர்டில் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட நீங்கள் தற்போது விண்ணப்பித்துள்ள தேர்வுகளின் விவரங்கள் காண்பிக்கப்படும்.
அதில் குரூப் 4 தேர்வுக்கு நேராக ஹால் டிக்கெட் டவுன்லோட் என்று இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் விண்ணப்ப எண் கொண்டு உள்நுழைய வேண்டும். இப்போது உங்கள் ஹால்டிக்கெட் திரையில் காண்பிக்கப்படும். அதனை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil