தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி), குரூப் 4 தேர்வு முடிவுகளை, கடந்த நவம்பர் மாதம் 12ம் தேதி மாலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த இணைய முகவரிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை நிரப்பினால், உங்கள் மதிப்பெண்ணும், உங்கள் ரேங்க் பட்டியலையும் உங்கள் கண்முன்னே காட்சிக்கு வரும். இந்த ரேங்க் பட்டியலில் மாநில வாரியாகவும் , ஜாதி பிரிவு வாரியாகவும் காண்பிக்கப்படும்.
குரூப் 4, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சில நாட்களிலேயே, காலியிடங்களின் எண்ணிகையை அதிகரித்தற்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. இதில், ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிட்ட குரூப் 4 அறிவிப்பில் 6491 காலியிடங்கள் சொல்லப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த காலியிடங்களை 9398-க உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்து இருந்தது. இதனால், கிட்டத்தட்ட 2,907 தேர்வர்களுக்கு கூடுதலாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இதுகுறித்து மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமியில், டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் எம்.ராதாகிருஷ்ணன் நம்மிடம் தெரிவிக்கையில், " மாணவர்களிடம் படித்து வேலை வாங்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது, ஆனால் அதற்கேற்ற யுக்திககளை அவர்கள் யோசிப்பது இல்லை. உதாரணமாக, டைபிஸ்ட் பணி மற்றும் ஸ்டெனோ டைபிஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். டிஎன்பிஎஸ்சி-ன் அறிவிப்பின் படி இரண்டிற்கும் தனியான அரசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே இந்த பணிக்கு தேர்வர்கள் தேர்வாக முடியும். இந்த இரண்டு பணிகளுமே கடந்த ஆண்டு நிரப்பபடாமல் இந்த வருடம் 'carry Forward" ஆகியுள்ளது. அதிலும், குறிப்பாக ஸ்டெனோ டைபிஸ்ட் பணியில் 221 பணியிடங்கள் 'carry Forward" ஆகியுள்ளது. யோசித்து பாருங்கள், பணிகள் காலியாக இருக்கு, ஆனால் நிரப்ப முடியவில்லை. எனவே, தேர்வில் உள்ள 200 கேள்விகளை மட்டும் குறிவைக்காமல், டைப் ரைட்டிங் , ஷார்ட் ஹேண்டு போன்றவற்றில் முறையாக பயிற்சி பெற்று அரசு சான்றிதழ் வாங்கியிருந்தால் தேர்வர்களுக்கு கூடுதல் பலமாய் விளங்கும்" என்றார்.
டைபிங் கிளாஸ் செல்வதற்கு தேர்வர்கள் முனைப்போடு இல்லை, எதற்காகவோ தயக்கம் காட்டுகிறார்கள் என்றும் ராதா கிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.
ஒரு சின்ன முயற்சி, சின்ன சான்றிதழ் இல்லாததால் குரூப் 4 தேர்வில் 3,729 பணியிடங்களுக்கு போட்டியிட முடியாமல் போகிறது என்ற உண்மையையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.