TNPSC Group 4 Online Apply Last Date 2019: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (14ம் தேதி) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், விரைந்து விண்ணப்பிக்குமாய் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
வெட்டி ஆபிசர்களாக இருக்கும் இளைய தலைமுறையினரை, வி.ஏ.ஓ.க்கள் எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசுப்பணியில் அமர்த்தும் அரிய பணியை, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் முற்பகுதியில் வெளியானது. கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
விண்ணப்பிக்க இன்று இறுதிநாள் என்றாலும், தேர்வுக்கட்டணத்தை வரும் 16ம் தேதி வரை செலுத்தலாம் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
13 லட்சம் பேர் விண்ணப்பம் : கடந்த ஆண்டு நடைபெற்ற எழுத்துத்தேர்வுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தமுறை, இதுவரை 13 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று (14ம் தேதி) நள்ளிரவு வரை நேரம் உள்ளதால், விண்ணப்பதாரார்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.