நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த டிஎன்பிஎஸ்சி குரூப்-4 நேர்முகத் தேர்வு இன்னும் 48 மணி நேரத்திற்குள் தொடங்க உள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு முன் உங்களுக்கு தேவையான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
- கடைசி நேரத்தில் புதிதாய் படிக்க வேண்டாம் என்ற அறிவுரையை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். ஆனால், இந்த அறிவுரை எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. உங்கள் மனநிலையைப் பொருத்து அடுத்த 48 மணி நேரத்தை திட்டமிடுங்கள்
- குறிப்பாய் சமிபத்தில் கொண்டாடப்பட்ட உலகளாவிய முக்கிய தினங்கள், புதிதாய் பதிவியேர்த்த அயல் நாடு அதிபர்கள், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த அயல்நாட்டு அதிபர்கள், உலகளாவிய அமைப்புகளில் புதிதாய் நியமிக்கபட்டவர்களின் பெயர்கள் (உதாரணமாக ,உலக வங்கியின் தலைவர் பதவி)போன்றவைகளை ஒருமுறை திருப்பி பார்த்துவிடுங்கள
- அடுத்தபடியாக, தமிழக நிர்வாகத்தின் சாதனைகளாக சொல்லப்பட்ட விசயங்ககளை( தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை, ஐசிடி கொள்கை, டெக்ஸ்டைல் கொள்கை, புது மாவட்ட அறிவிப்பு, உலக வங்கி - தமிழ்நாடு ஏதேனும் ஒப்பந்தம், தமிழ்நாட்டிற்கு கிடைத்த விருதுகள்) தெளிவாக படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- தமிழகத்தின் தனிப்பட்ட பிரச்சனைகளாக சொல்லப்பட்ட தகவல்களை நன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள் (உதரணமாக, தண்ணீர் வறட்சியை எதனால் வந்தது , அரசாங்கம் எவ்வாறு கையாண்டது, எந்த நிதி அயோக் ரிப்போர்டில் தமிழகம் பின்னணியில் இருந்தது, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி, )
- மத்திய அரசின் புது திட்டங்கள், புது கொள்கைகள், புது அறிவுப்புகள், அமைச்சர்களின் பெயர்கள், போன்றவைகளை அத்துப்பிடியாய் வைத்துக் கொள்ளுங்கள்.
- இந்த வருட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய நம்பர்களையும், முக்கிய மாற்றங்களையும் ஒரு முறை பார்த்து செல்வது மிகவும் நல்லது.
- காரணம் இல்லாமல் எந்த கேள்வியும் கேள்வி தாளில் இருக்காது. உதாரணமாக நீங்கள் இன்னும் ஐந்நூறு வினாக்கள் படிக்க வேண்டியிருந்தால் அதில் எது கேள்வியாக்கப்படும், கேள்விகளாய் வர வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் நீங்கள் தீர்மானியுங்கள்.
- கடைசி நேரத்தில் தேர்வு பற்றிய பயம், புலம்பல் வரக்கூடிய ஒன்று தான். இவை இரண்டும் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை பயம், புலம்பலை சமாதானமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.