TNPSC 2019 Group 4 Notification Released: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், விண்ணப்பதாரார்கள் தேர்வில் வெற்றி பெற டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே, அவ்வப்போது நடைபெறும் தேர்வுகளின் கேட்கப்படும் வினாத்தாளின் ஒரு பிரதியை மாதிரி வினாத்தாள் என்ற பகுதியின் கீழ் தொகுத்து வருவது தேர்வர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தகுதிக்கே அரசு வேலை ; குரூப் 4 தேர்வு வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள் மாணவர்களே!!!
பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
விண்ணப்பதாரார்கள் தேர்வில் வெற்றி பெற டிஎன்பிஎஸ்சி நிர்வாகமே, அவ்வப்போது நடைபெறும் தேர்வுகளின் கேட்கப்படும் வினாத்தாளின் ஒரு பிரதியை மாதிரி வினாத்தாள் என்ற பகுதியின் கீழ் தொகுத்து வருகிறது.
2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வு ( நேர்முகத்தேர்வு) வினாத்தாள் வரை இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது 2008 முதல் 2019 மே மாதம் வரை நடைபெற்ற தேர்வுகளின் விடைக்குறிப்புகளும் இங்கு ஆண்டுவாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுத உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இந்த
டிஎன்பிஎஸ்சி தேர்வு மாதிரி வினாத்தாள்கள்
லிங்கினுள் சென்று அதில் உள்ள மாதிரி வினாத்தாள்கள் மற்றும் இதற்குமுன் நடைபெற்ற தேர்வுகளின் விடைக்குறிப்புகளை ஆராய்ந்து, அவற்றில் அடிக்கடி கேட்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி, படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்...
உங்களுக்காக சில மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அவை கிடைக்கப்பெறும் லிங்க்
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்வு ( நேர்முகத்தேர்வு) வினாத்தாள் (Degree standard)
2011ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ) தேர்விற்கான பொதுஅறிவு மற்றும் பொதுத்தமிழ் வினாத்தாள்
2011ம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ) தேர்விற்கான பொதுஅறிவு மற்றும் பொது ஆங்கிலம் ( General English) வினாத்தாள்
2011ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் Group 1 (B) தேர்வு பொதுஅறிவு மற்றும் பொதுத்தமிழ் வினாத்தாள்
2011ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை துணை கமிஷனர் Group 1 (B) தேர்வு பொதுஅறிவு மற்றும் பொதுஆங்கிலம் வினாத்தாள்
இதுபோன்று வரிசைக்கிரமமாக ஆண்டுதோறும் நடைபெற்ற தேர்வுகளின் வினாத்தாள்கள் இந்த பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் அதிகபட்ச விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளம் காணுங்கள்...