TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நீங்கள் www.tnpsc.gov.in, www.tnps-c-ex-ams.net, www.tnps-c-ex-ams.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 6,491 காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கான குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி கடைசி நாள் ஆகும். அடுத்த மாதம் 16-ந்தேதிக்குள் தேர்வு கட்டணங்கள் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது.
read more.. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு பணி விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
தகுதி விபரங்கள்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிகளுக்கு, கூடுதலாக தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில்நுட்பக் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் ஒரே விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு எழுதுவோருக்கான குறைந்தபட்ச வயது 18.
கட்டண விபரம்:
விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களுடைய அடிப்படை விவரங்களை நிரந்தரபதிவு மூலமாக (ஓ.டி.ஆர்.) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது ஆகும். அதன்பிறகு உரிய கட்டணத்தை செலுத்தி புதுப்பித்து கொள்ள வேண்டும்.
மற்ற விபரங்கள்:
விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணங்களை இன்டர்நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம். மாற்றுமுறையை தேர்வு செய்பவர்கள் எஸ்பிஐ, எச்டிஎப்சி கிளைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி சில நாட்களில் சமர்ப்பிக்க முடியாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது. இது குறித்த சந்தேகங்களை 1800-425-1002 044-25332855, 044-25332833 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
பணியிடங்கள் விபரம் :
கிராம நிர்வாக அலுவலர் - 397, இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) - 2,688, இளநிலை உதவியாளர் (பிணையம்) - 104, வரித்தண்டலர் (நிலை-1) - 34, நில அளவர் - 509, வரைவாளர் - 74, தட்டச்சர் - 1,901, சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) - 784.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதி - முழுத்தகவல்கள்
தேர்வு விபரம்:
200 வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
How to apply in online : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
1) விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in இல் ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
2) எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கு முன் ஒரு முறை பதிவு (OTR) மற்றும் விண்ணப்பதாரர் டாஷ்போர்டு கட்டாயமாகும். . விண்ணப்பதாரர் பதிவு கட்டணமாக ரூ .150 / - செலுத்தி ஒரு முறை பதிவில் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
3.வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்ட ஒரு முறை பதிவு, பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். அனைத்து விண்ணப்பங்களும் விண்ணப்பதாரர் பதிவு செய்த ஒரு முறை பதிவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
3) ஒன் டைம் பதிவின் கீழ் விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் புகைப்படம், சான்றிதழ் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற சிடி / டிவிடி / பென் டிரைவில் தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றின் படத்தை ஸ்கேன் செய்திருக்க வேண்டும்.
4) 29.09.2015 அன்று அல்லது அதற்கு முன்னர் ஒன் டைம் பதிவில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், புதிய ஒன் டைம் பதிவு முறைமையில் விண்ணப்பதாரர்களின் டாஷ்போர்டை உருவாக்க தங்களின் தற்போதைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
5.ஒரு முறை பதிவில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு ஐடியை உருவாக்க எந்த விண்ணப்பதாரருக்கும் அனுமதி இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.