TNPSC 2019 Group 4 Notification Released: வெட்டி ஆபிசர்களாக இருக்கும் இளைய தலைமுறையினரை, வி.ஏ.ஓ.க்கள் எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆக ஆக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முன்வந்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு - 10 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397 பணியிடங்கள்
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
வயது வரம்பு :
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ.) பணிக்கு குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்புவில், இதர பிரிவினரை தவிர்த்து மற்ற வகுப்பினருக்கு வயதுவரம்பில் தளர்வு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.சி, எஸ்சி(ஏ). எஸ்டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் இதர பிரிவுகளில் உள்ள 40 வயது
எஸ்.சி, எஸ்சி(ஏ). எஸ்டி., மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 53 வயது
இதர வகுப்புகளில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48 வயது
மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து கூடுதலாக 10 ஆண்டுகள் ; இதர பிரிவினருக்கு 30 வயது
கல்வித்தகுதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் மேற்படிப்பு படித்திருந்தாலும், அவரது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரமே, கல்வித்தகுதிக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
தேவையான ஆவணங்கள்
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து
ஜாதி சான்றிதழ்
குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவொரு கல்விச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்களிடம் நேரடியாக, டி,என்.பி.எஸ்.சி. நிர்வாகம் கேட்டுக்கொண்டாலொழிய அவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவோ, சமர்ப்பிக்கவோ வேண்டியதில்லை. விண்ணப்பதாரர்கள், தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்து ஸ்கேன் போட்டோ 50 கேபி அளவிற்குள் இருக்க வேண்டும். இதை மட்டுமே, குறிப்பிட்ட இடத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்கள் சரியாக இல்லாமல் இருந்தாலோ, தெளிவற்று இருந்தாலோ விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள், தங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையெழுத்து கவனமாக ஸ்கேன் செய்து குறிப்பிட்ட அளவு கொண்டதாகவும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வு வினாத்தாள் முறை ( Exam pattern)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3 மணிநேரம் கால அளவு கொண்டது. 4 விடைகள் கொடுத்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்வர்கள் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. இந்த வினாத்தாள் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். 200 கேள்விகளில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என 100 கேள்விகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுக்கல்விக்கு (General Studies) என 75 கேள்விகளும் Aptitude Testக்கு என 25 கேள்விகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாளில், General Studies மற்றும் Aptitude Testக்கான வினாக்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இடம்பெற்றிருக்கும். பொதுத்தமிழ் பகுதியில் உள்ள வினாக்கள் தமிழ்மொழியிலும், பொது ஆங்கிலம் (General English) பகுதியில் உள்ள வினாக்கள் ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருக்கும். தேர்வர்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.