டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து தேர்வாணையம் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தியது. 7301 பதவிகளுக்கு நடந்த இந்தத் தேர்வை 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர். அப்போது தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்: TNPSC குரூப் 1 தேர்வு; கடந்த ஆண்டு கட் ஆஃப் இதுதான்!
பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, தேர்வாணையம் தேர்வு முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
இந்தநிலையில், தேர்வர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த குரூப் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனால் குரூப் 4 தேர்வு முடிவுகளும் விரைவில், அதாவது ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியானது. ஏனெனில், ஒரே வாரத்தில் 4 தேர்வுகளுக்கான முடிவுகளை தேர்வாணையம் அறிவித்துள்ளது, எனவே விரைவில் பல்வேறு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படலாம் என்று தேர்வாணைய தரப்பில் கூறியதாக கூறப்படுப்படுகிறது.
இந்தநிலையில் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வு முடிவு வெளியிட்டிற்கு பிறகான, ரிசல்ட் குறித்த அப்டேட் என்பதால், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் நிச்சயம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இதனால் குரூப் 4 தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வுகள் ரிசல்ட்டை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil