/indian-express-tamil/media/media_files/2025/03/18/za1l1c314gqsJtB4b4DL.jpg)
இளநிலை உதவியாளர், தட்டச்சர், வி.ஏ.ஓ. பதவிகளுக்கான பிரிவு வாரியான சதவீத ஒதுக்கீடு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்பது, எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் அடுத்த கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆகும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வெழுதிய மொத்த விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்வின் கடினத் தன்மை போன்ற காரணிகளின் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
ஜூலை 12 அன்று நடைபெற்ற இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு, சாதி வாரியான கட்-ஆஃப் மதிப்பெண்கள் மாறுபட வாய்ப்புள்ளது. இதில், பொதுப் பிரிவினர் (General Category) மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC), பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) பிரிவினரை விட அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டியிருக்கும்.
இந்த கட்-ஆஃப் மதிப்பெண், தேர்வர்கள் தங்கள் செயல்திறனை மதிப்பிடவும், ஆவணச் சரிபார்ப்புக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை மதிப்பிடவும் அளவுகோலாகச் செயல்படும். அதிகாரபூர்வமான கட்-ஆஃப் மதிப்பெண்கள், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகளுடன் (TNPSC Group 4 Result 2025) tnpsc.gov.in மற்றும் apply.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும். இறுதி கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தெரிந்துகொள்ள தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விவரங்கள்
தேர்வுப் பெயர் - டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு
தேர்வு நடத்தும் அமைப்பு - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பதவியின் பெயர்கள் - இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), கிராம நிர்வாக அலுவலர் (VAO), சுருக்கெழுத்தர் (Steno-Typist)
மொத்த மதிப்பெண்கள் - 300 மதிப்பெண்கள்
தேர்வு நேரம் - 3 மணி நேரம்
தகுதி மதிப்பெண்கள் (Qualifying Marks) - குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள்
குரூப் 4: எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் 2025 (பதவி வாரியாக)
தேர்வின் கடினத்தன்மை மற்றும் போட்டியின் அடிப்படையில், குரூப்-4 தேர்வின் எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் 2025 விரைவில் வெளியாக உள்ளன. அதே சமயம், காலிப் பணியிடங்கள் சாதி வாரியாகவே நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு உள்ளது, அதன்படி எத்தனை பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என்பது குறித்து "ஜாப் பாயிண்ட் ஹியர்" (Jobs Point Here) என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உங்கள் பிரிவுக்கு எந்தப் பதவிக்கு எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த அட்டவணை மூலம் தெரிந்துகொள்ளலாம்.
| பிரிவு/ காலிப் பணியிடங்கள் | VAO (கிராம நிர்வாக அலுவலர்) (260 பணியிடங்கள்) | இளநிலை உதவியாளர் (Junior Assistant) (1969 பணியிடங்கள்) | தட்டச்சர் (Typist) (1392 பணியிடங்கள்) |
| பொதுப் பிரிவு (BC) | 26.5% அதாவது 58 பேர் | 31% (610 பேர்) | 26.5% (369 பேர்) |
| பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) | - | 25.6% (522 பேர்) | - |
| பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) | 3.5% அதாவது 8 பேர் | 3.5% (69 பேர்) | 3.5% (49 பேர்) |
| மிகவும் பிற்படுத்தப்பட்ட/சீர் மரபினர் (MBC/DNC) | 20% அதாவது 44 பேர் | 20% (394 பேர்) | 20% (278 பேர்) |
| பட்டியலினத்தவர் (SC) | 15% அதாவது 33 பேர் | 15% (295 பேர்) | 15% (209 பேர்) |
| Open Competion (OC) | 31% அதாவது 68 பேர் | - | 31% (431 பேர்) |
| பட்டியலினத்தவர் (அருந்ததியர்) (SCA) | 3% அதாவது 7 பேர் | 3% (59 பேர்) | 3% (42 பேர்) |
| பழங்குடியினர் (ST) | 1% அதாவது 2 பேர் | 1% (20 பேர்) | 1% (14 பேர்) |
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us