TNPSC Group 4, Group 2: புதிய பாடத்திட்டம் அதிகாரபூர்வ வெளியீடு; இதை கவனித்தீர்களா?

TNPSC Exam Update : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Exam Update : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பாதி நேரம் தமிழுக்கு ஒதுக்குங்க... TNPSC Group 4 கடைசி நேர சக்சஸ் ஸ்ட்ராட்டஜி!

TNPSC Exam Update : தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎஸ்பிஎஸ்சி)சார்பில் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குருப் 1 குருப் 2 குருப் 4 விஏஓ உள்ளிட்ட வகைககளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisment

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் ஆதிக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த பல லட்சம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், நடப்பு ஆண்டில் நிச்சயமான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குருப் 2 மற்றும் குருப் 4 தேர்வுக்காக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுளளது. தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி ஒவ்வொரு தேர்வரும் தமிழ் மொழி தாளில் கட்டாயம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். புதிதாக தமிழ்தான் சேர்க்கப்பட்டுள்ளதால்,டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பழைய பாடத்திட்டத்தின்படி நடைபெறுமா அல்லது பாடத்திட்டம் மாற்றியடைக்கப்படுமாக என்பது குறித்து தேர்வர்கள் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்திற்கு தீர்வளிக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தின்படிதான் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, அதற்காக பாடத்திட்டத்தினை தற்போது வெளியிட்டுள்ளது.

Advertisment
Advertisements

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 திருத்தப்பட்ட பாடத்திட்டம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 திருத்தப்பட்ட பாடத்திட்டம்

அதிகாரப்பூர்வ இணையதளம்

இதில் முதல்கட்டமாக குருப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்காக பாடத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தேர்வுக்காக மாதிரி வினாத்தாள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: