TNPSC Qroup 4 Old Question Paper @tnpsc.gov.in: செப்டம்பர் ஒன்றாம் தேதி நடக்கவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்- IV தேர்வுக்கான வினாத் தாள் எப்படி இருக்கும் என்பதை கிழே காண்போம்.
மூன்று மணி நேரத்தில் இருநூறு கேள்விகள் கொடுத்து உங்கள் திறமையை சொதிக்கப்பார்க்க உள்ளது நமது டிஎன்பிஎஸ்சி. இந்த இருநூறு கேள்விகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படும்.அதாவது, ஆங்கிலம்/தமிழ் பொதுபாடப்பிரிவில் நூறு கேள்விகளும், பொது பாட பிரிவில் 75 கேள்விகளும், கணக்கு/நுண்ணறிவில் இருபத்தி ஐந்து கேள்விகளும் அடங்கும்.
இருநூறு கேள்விகளுக்கும் ஒரே மதிப்பெண் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். சில கேள்விகளுக்கு மட்டும் விஞ்ஞானி போல் யோசித்து, மற்ற கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிடாதீர்கள். எல்லா கேள்விகளுக்கும் ஒரே வகையான மதிப்பைக் கொடுங்கள்.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஒன்றரை மதிபெண் வழங்கப்படும். மொத்தம் இருநூறு கேள்விகளுக்கு முந்நூறு மதிப்பெண் என்ற கணக்கில் தேர்வு நடைபெறும்.
இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் இன்னொரு முக்கிய சாரம்சம் என்னவென்றால் இதில் நெகடிவ் மதிப்பெண் இல்லை என்பதுதான். அதாவது, உங்களது ஒரு பதில் தவறாய் இருந்தால் மொத்த மதிப்பெண்ணில் எந்த மதிப்பெண்ணும் கழிக்கப்படாது. நீங்கள் சரியாய் அளித்த பதில்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்படும்.
குறைந்தப் பட்சம் 90 மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் ஆவீர்கள். பின்பு, கட்-ஆப் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்கு வரவழைக்க படுவார்கள். தேர்வர்கள், இந்த கட்-ஆப் லிஸ்டில் வரவேண்டும் என்றால் குறைந்தப்பட்சம் 175 கேள்விகளுக்கு மேல் சரியாய் அமைதல் வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.