குரூப்-4 ஹால் டிக்கெட்: ஐந்து நாட்களில் வெளியாகும் எனத் தகவல்

ஹால் டிக்கெட் நம்மை பொறுத்த வரையில் ஒரு வெத்து காகிதம் கிடையாது. டிஎன்பிஎஸ்சி யைப் பொறுத்த வரையில் அது வேலை உத்திரவாதக் கடிதமும் கிடையாது.

TNPSC Group 4 Exam hall ticket Expected Date:
TNPSC Group 4 Exam hall ticket Expected Date:

வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடக்கவிருக்கிறது. இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இத் தேர்விற்கான ஹால் டிக்கெட் எப்போதும் வெளியாகும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாய் உள்ளது.

டிஎன்பிஎஸ்சி-க்கு வெறித்தனமாக படிப்பவர்களும், சும்மா பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக  விண்ணப்பம் செய்தவர்களும் கூட இந்த ஹால்டிக்கெட்டடை எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணணயதள முகவரியான http://www.tnpsc.gov.in (அல்லது) http://www.tnpscexams.net (அல்லது)  http://www.tnpscexams.in- ல்  இன்னும் ஐந்து நாட்களில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹால் டிக்கெட்டும் அதன் எதிர்பார்ப்பும் :

ஹால் டிக்கெட் நாம் தேர்வு மையத்திற்குள் நுழைய ஒரு கருவியாய் மட்டும் இருந்தாலும், இந்த ஹால் டிக்கெட் எப்பவுமே தேர்வர்கள் மத்தியில் ஒரு இனைப்பிரியா எதிர்பார்ப்பை உருவாக்குகிறது என்றே சொல்லாம்.

தனக்கு தேர்வு மையம் எங்கே இருக்கப் போகிறது? தனது தேர்வு எண் அதிர்ஷ்டத்தை தாங்கி உள்ளதா? இந்த முறை வாழ்க்கை மாற்றப்படுமா? தனது பெயர் ஒழுங்காய் அச்சிடப்பட்டு உள்ளதா?  என்ற கேள்விகள் தான் பிரிண்ட் அவுட் கடையில்  ஹால் டிக்கெட் ப்ரிண்டரில் இருந்து  வெளியாகும் பொது நம் மனதில் ஒலிக்கும்.

ஹால் டிக்கெட் நம்மை பொறுத்த வரையில் ஒரு வெத்து காகிதம் கிடையாது. டிஎன்பிஎஸ்சி யைப் பொறுத்த வரையில் அது வேலை உத்திரவாதக் கடிதமும் கிடையாது. இந்த, இரண்டிற்கும் இடையிலான தூரத்திலும், போராட்டத்திலும் தான்  ஹால் டிக்கெட்- இன் அழகியல் இருக்கிறது என்பது தான் நிதர்சமான உண்மை.

இந்த ஹால் டிக்கெட்டின் அழகியலை ரசிக்க நீங்கள் இன்னும் ஐந்து நாட்கள் தான் காத்திருக்க வேண்டும். ஐந்து நாள் என்றாலும் அது ஒரு நல்ல காத்திருப்பு.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 4 hall ticket released date group 4 exam on september

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com