TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
தேர்வு வினாத்தாள் முறை மற்றும் தேர்வு செயல்முறை
தேர்வு வினாத்தாள் முறை ( Exam pattern)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3 மணிநேரம் கால அளவு கொண்டது. 4 விடைகள் கொடுத்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்வர்கள் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. இந்த வினாத்தாள் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
200 கேள்விகளில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என 100 கேள்விகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுக்கல்விக்கு (General Studies) என 75 கேள்விகளும் Aptitude Testக்கு என 25 கேள்விகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாளில், General Studies மற்றும் Aptitude Testக்கான வினாக்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இடம்பெற்றிருக்கும். பொதுத்தமிழ் பகுதியில் உள்ள வினாக்கள் தமிழ்மொழியிலும், பொது ஆங்கிலம் (General English) பகுதியில் உள்ள வினாக்கள் ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருக்கும். தேர்வர்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு! எப்படி நடத்தப்படுகிறது தெரியுமா?
தேர்வு செயல்முறை (Selection Process)
டைப்பிஸ்ட் பணி : டைப்பிஸ்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தகுதியை தேர்வர்கள் பெறவில்லையெனில், தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில், ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழ் டைப்ரைட்டிங்கில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஸ்டெனோ டைப்பிஸ்ட் : ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள், இடைநிலை தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கக்கூடாது. சீனியர் கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, தகுதியுடையவர்களாக கருதப்படுவர். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டைப்ரைட்டிங் மற்றும் ஸ்டேனோகிராபியில் முழுத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற பணிகளுக்கு
டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் 90 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகும். எழுத்துத்தேர்வு மூலம், தேர்வர்கள் 300 மதிப்பெண்களுக்கு விடையளிப்பர். இதில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், சான்றிதழ் சரிபார்த்தல் நிகழ்விற்கு அழைப்பு விடுக்கும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தேர்வர்களின் விபரங்கள், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்த்தலுக்கு பிறகு, தகுதியான தேர்வர்கள், கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். எந்த துறையில் பணியமர்த்தப்பட இருக்கிறீர்களோ, அந்த துறையின் சார்பாக, ரேங்க், அவர்கள் சார்ந்த பிரிவு, பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட காரணிகளுக்கு ஏற்ப அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.