TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு இதில் வெளியாகியுள்ளது. ஜூன் 14-ம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், ஜூலை 14 வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் அஸிஸ்டெண்ட், பில் கலெக்டர், டிராஃப்ட்ஸ்மேன், டைபிஸ்ட் போன்ற பணிகளுக்கு இந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை எழுதலாம்.
இதன் தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.
குரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு: டி.என்.பி.எஸ்.சி., தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
tnpsc.gov.in , www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in ஆகிய இணைய தளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தபாலின் மூலம் ஹால்டிக்கெட்டுகள் அனுப்பப்பட மாட்டாது, அதனால் tnpsc.gov.in என்ற இணையதளத்தை அவ்வப்போது செக் செய்துக் கொள்ளவும்.
ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்படும் அனைத்து விதிமுறைகளையும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
TNPSC Group 4 Notification: காலியிட விபரம்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) - 397
ஜூனியர் அஸிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688
பில் கலெக்டர், கிரேட் - I - 34
ஃபீல்டு சர்வேயர் - 509
டிராஃப்ட்ஸ்மேன் - 74
டைப்பிஸ்ட் - 1901
ஸ்டெனோ டைபிஸ்ட் - 784
முக்கியத் தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் - 14.07.2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் - 16.07.2019
தேர்வு நடைபெறும் நாள் - செப்டம்பர் 1, 2019
கல்வித் தகுதி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், டைப்பிங்கில் டிப்ளமோ சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும்.
வயது
பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், பட்டியலினத்தவர் 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
TNPSC Group 4 Recruitment: எப்படி அப்ளை செய்வது?
1. tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குள் நுழையவும்.
2. இணையதளத்தில் அறிவிப்பு டேபில் (Notifications tab) 'சமீபத்திய அறிவிப்பு'-ஐ தேர்ந்தெடுங்கள். பின்பு பதிவு செய்யும் இணைப்பான http://tnpsc.gov.in/latest-notification.html தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது புதிய பக்கம் திறக்கும். விவரங்களை பூர்த்தி செய்து 'சமர்ப்பி' (submit) என்ற பட்டனை அழுத்தவும்.
4. கிளிக் செய்த பின்பு வரும் பதிவு எண்ணைக் (registration number) குறித்துக் கொள்ளுங்கள்.
5. ’அப்ளை’(Apply) என்ற பட்டனை கிளிக் செய்யவும். விண்ணப்ப படிவம் திரையில் காண்பிக்கப்படும்.
6. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 'சமர்ப்பி' (submit) என்ற பட்டனை அழுத்தவும்.
7. பின்பு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்
8. கட்டண ரசீதின் நகலை கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.
தவிர, முகவர்கள், ஏஜென்ஸிகள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், விண்ணப்பதாரர்கள் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ளும்படியும் டி.என்.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்
முதன் முறையாக பதிவு செய்பவர்கள், ரூ.150 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.150 உடன், தேர்வுக் கட்டணமாக ரூ.100-ம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் செலுத்த வேண்டும். எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி கிளைகளிலும், தபால் அலுவலகத்திலும் ஆஃப்லைனில் செலுத்தலாம். பணம் செலுத்திய வங்கி சலானின் நகலை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
முன்னாள் இராணுவத்தினர், SC, ST, மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகளுக்கு தேர்வுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பற்றிய மேலும் தகவல்களுக்கு tnpsc.gov.in என்ற இணைய தளத்தை அணுகவும்.