TNPSC 2019 Group 4 Notification Released: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ) – 397
ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) – 2688
பில் கலெக்டர், கிரேடு – I – 34
பீல்டு சர்வேயர் – 509
டிராப்ட்ஸ்மேன் – 74
டைப்பிஸ்ட் – 1901
ஸ்டெனோ டைப்பிஸ்ட் – 784
முக்கிய தேதிகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூலை 14, 2019
தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் – ஜூலை 16, 2019
தேர்வு நாள் – செப்டம்பர் 1, 2019
கல்வித்தகுதி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் மேற்படிப்பு படித்திருந்தாலும், அவரது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விபரமே, கல்வித்தகுதிக்கான ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.
டைப்பிஸ்ட் பணிக்கு
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் பயிற்சியில் தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது
தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது
ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு
ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிக்கு
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்ரைட்டிங் மற்றும் சார்ட்ஹேண்ட் தேர்வில் தேர்ச்சி
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் / ஹையர் கிரேடு அல்லது
தமிழ் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலத்தில் லோயர் கிரேடு அல்லது
ஆங்கிலம் டைப்ரைட்டிங்கில் சீனியர் கிரேடு மற்றும் தமிழில் லோயர் கிரேடு
கம்ப்யூட்டர் கல்வித்தகுதி
டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை நிறைவு செய்திருத்தல் வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பை முடிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். பணியின் பயிற்சிகாலத்தினுள் அவர்கள் இந்த படிப்பை நிறைவு செய்திட வேண்டும்.
பீல்டு சர்வேயர்
10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐக்களில் சர்வே குறித்த பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்ற அனைத்து பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சியே, குறைந்தபட்ச தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் போதிய புலமை பெற்றிருக்கவேண்டும்.
தேர்வு வினாத்தாள் முறை ( Exam pattern)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 3 மணிநேரம் கால அளவு கொண்டது. 4 விடைகள் கொடுத்து சரியான விடையை தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்வர்கள் 200 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதிகபட்ச மதிப்பெண்கள் 300. இந்த வினாத்தாள் பத்தாம் வகுப்பு கல்வித்தரத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். 200 கேள்விகளில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என 100 கேள்விகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுக்கல்விக்கு (General Studies) என 75 கேள்விகளும் Aptitude Testக்கு என 25 கேள்விகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வினாத்தாளில், General Studies மற்றும் Aptitude Testக்கான வினாக்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இடம்பெற்றிருக்கும். பொதுத்தமிழ் பகுதியில் உள்ள வினாக்கள் தமிழ்மொழியிலும், பொது ஆங்கிலம் (General English) பகுதியில் உள்ள வினாக்கள் ஆங்கிலத்திலும் கேட்கப்பட்டிருக்கும். தேர்வர்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.