TNPSC Group 4 One Time Online Registration 2019 Process:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பை, சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 14 முதல் ஜூலை 14ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் எனப்படும் ஒருமுறைப்பதிவு இன்றியமையாததாகிறது. தேர்விற்கு விண்ணப்பிக்கும்முன், இந்த பதிவு செய்வது அவசியம். இதனை, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமாக கருதமுடியாது.
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு பணியிடங்கள், சம்பளம் முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி போர்டலில் இந்த ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனின் மூலம் பதிவு செய்தபிறகு, டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் எல்லாவித தேர்வுகளையும் ( நம் கல்வித்தகுதி அடிப்படையில்) எழுதலாம்.
ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் ( ஒருமுறைப்பதிவு) குறித்து விரிவாக பார்ப்போம்
டிஎன்பிஎஸ்சி போர்டல்களான tnpsc.gov.in (Or) tnpscexams.in இணையதளங்களில் அரசு பணிக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கும் முன், நாம் நிரந்தர பதிவு மேற்கொள்ள வேண்டும் . இந்த பதிவிற்கு ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் தான் வழிமுறையாக உள்ளது. இந்த நிரந்தர பதிவு 5 ஆண்டுகால அவகாசம் உடையது. இந்த பதிவு மேற்கொள்ள ரூ.150 கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். ஒருமுறை பதிவு செய்தபின், தேர்வுக்கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு நாம் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை.
பயன்கள்
ஒருமுறை நிரந்தர பதிவு மேற்கொண்டுவிட்டால், டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு, உங்களுக்கு தொடர்ந்து வந்தடையும்.
தேர்விற்கு படித்துக்கொண்டிருப்பவர்களின் நேரவிரயம் ஆவதை தவிர்க்கும் பொருட்டு நிரந்தர பதிவுமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்விற்கும், தேர்வர்கள் குறித்த விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. இதனால், தேர்வர்களின் பொன்னான நேரம் சேகரமாகிறது.
ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் செய்வது எப்படி?
1. டிஎன்பிஎஸ்சி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கவும்
2. ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் படிவத்தை பூர்த்தி செய்யவும்
3. ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்
4 பின் ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ, கையெழுத்து பிரதியை பதிவேற்றவும்
5. பின் submit பட்டனை அழுத்தவும்
6. பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.