/indian-express-tamil/media/media_files/2024/12/13/f5bSdpPd7uEcojRk7Xjo.jpg)
TNPSC Group 4 result 2025 TNPSC Group 4 expected cut off TNPSC latest news
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு 2025-க்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட 3,935 காலியிடங்களுக்கு, 11.48 லட்சம்க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.
கடந்த ஜூலை 12, 2025 அன்று நடந்த இந்தத் தேர்வு முடிவுகள், வழக்கம் போல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் 2025-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் தங்கள் முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
அதிக அளவிலானோர் தேர்வு எழுதியுள்ளதால், இந்த ஆண்டுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் சற்று அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்வு பகுப்பாய்வு மற்றும் போட்டி நிலவரத்தின் அடிப்படையில், எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்களின் விவரம் இங்கே (300 மதிப்பெண்களுக்கு):
பொதுப் பிரிவு (OC): 168 - 172
பிற்படுத்தப்பட்டோர் (BC): 164 - 168
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC): 162 - 166
பட்டியலிட்ட சாதியினர் (SC): 155 - 159
பழங்குடியினர் (ST): 148 - 152
கட் ஆஃப் மார்க்ஸ் தொடர்பாக ரேடியன் ஐஏஎஸ் அகாடமி வெளியிட்ட வீடியோ
முக்கிய குறிப்புகள்:
இந்த மதிப்பெண்கள் ஒரு உத்தேசமான கணிப்பே. அதிகாரபூர்வமான கட் ஆஃப் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே தெரியவரும்.
சென்னையிலிருந்து கோவை வரை, நகர்ப்புறங்களில் போட்டி அதிகமாக இருப்பதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் அதிகளவில் இருக்கும். கிராமப்புறங்களில் போட்டியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்றுக் குறைவாக இருக்கலாம். தேர்வர்கள் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த நேரத்தில், ஆவண சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்குத் தயாராவது சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.