Advertisment

TNPSC Group 4 Result: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Tamil nadu public service commission group 4 results : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதத்தில் தேர்வுக்குழு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

tnpsc group 4 result scanned documents upload online through E-seva ccentre

Tnpsc group 4 results released @tnpsc.gov.in : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி), குரூப் 4 தேர்வு முடிவுகளை நேற்று மாலை ஆன்லைனில் வெளியிட்டது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் (குரூப் 4) அல்லது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in -ல் தெரிந்துக் கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முடிவுகள் டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று முன்னர் கூறப்பட்டன. 2019-20-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி, நீதி அமைச்சுப்பணி, நில அளவை, நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தலைமை செயலகப்பணி மற்றும் சட்டமன்ற பேரவை செயலக பணிகளில் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்காக இத்தேர்வு நடத்தப்பட்டது.

Advertisment

செப்டம்பர் 1 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு பதிவு செய்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வின் பாஸ் மார்க் அல்லது கட்-ஆஃப் விவரங்கள் தேர்வுக்குழு ஆணையத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் மாதத்தில் தேர்வுக்குழு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

தேர்வு நடந்து 10 நாட்களுக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைத்தாள்களை வெளியிட்டது ஆணையம். விடைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 17 வரை விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.

Tnpsc group 4 results- how to check

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ள, 

அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in ஐ விசிட் செய்யவும்.

முகப்புப்பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளின் இணைப்புகளில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்க.

இப்போது புதிய பக்கம் திறக்கும். அதில், உங்கள் பதிவெண்ணை உள்ளிடவும்.

விவரங்களைச் சமர்ப்பித்து, அடுத்த பக்கத்தில் உங்கள் TNPSC குழு 4 முடிவைச் சரிபார்க்கவும்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ஆட்சேர்ப்பு விதிகளின்படி, எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், ஆன் ஸ்கிரீன் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதி பெற்றோர்களின் பட்டியல் ஆணையத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும். சரிபார்ப்பிற்குப் பிறகு, தகுதி வாய்ந்த  விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள். காலியிடத்தின் படி தகுந்த பதவி / துறைக்கு அவர்கள் ஒதுக்கப்படுவார்கள்.

Exam Result
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment