டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி டிவிட்டரில் #WeWantGroup4Results என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிய நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகலாம் என டி.என்.பி.எஸ்.சி மவுனம் கலைத்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி டிவிட்டரில் #WeWantGroup4Results என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகியது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதப்பட்டு 7 மாதங்கள் ஆகியும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகததால் தேர்வர்கள், குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் செய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு கடந்த 24.07.2022 அன்று நடந்தது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 பேர் தேர்வு எழுதினர். இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதனால் OMR விடைத்தாளின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளதாக கூறப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி டிவிட்டரில் #WeWantGroup4Results என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகிய நிலையில், டி.என்.பி.எஸ்.சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். ஓ.எம்.ஆர் (omr) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"