Advertisment

TNPSC Group 4: குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்; இதை மிஸ் பண்ணாதீங்க!

Apply Now for 7301 posts, Interest candidate can apply For TNPSC Group-IV vacancies- சமீபத்தில் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4 VAO exam

Tamil Nadu Public service Commission (TNPSC) 2022,Last date to Apply for TNPSC Group 4 2022 Today

TNPSC had notified a total of 7301 posts in different department, Combined civil services Examination -IV (Group - 4) 2022 Today- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

Advertisment

சமீபத்தில் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் -4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். இதற்கான தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் – 274

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினர் (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி.) வயது வரம்பு 40-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு: குரூப் 4 தேர்வில் தமிழ் மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்ணுக்கு மதிப்பிடப்படுகிறது.

தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த தாள் மதிப்பிடப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2022

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.07.2022.

அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், கட்டணச் சலுகை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

குருப்-4 ஒருங்கிணைந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. மேலும் பணியில் இருந்தவாறே, டி.என்.பி.எஸ்.சி. துறைத் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று, படிப்படியாகப் பதவி உயர்வும் பெறலாம்.

குரூப்-4 தேர்வுக்கு ஏப்ரல் 17 மாலை 5 மணி வரை 7.85 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamilnadu Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment